பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பாவேந்தரின்பாட்டுத்திறன்

இசையமுது, தேனருவி, பன்மணித்திரள் ஆகிய நூல்களில் சிந்து வகைப் பாடல்களில் காணலாம்.”

25. நொண்டிச் சிந்து நொண்டி நாடகங்களில் பயன் படுத்தப்பெற்ற சிந்துவகை நொண்டிச் சிந்து எனப் பெயர் பெற்றது. நொண்டிநாடகத்தில் நொண்டி ஒருவனே கதை மாந்தன் - ஒரே நடிகன். அவன் பாடும் சந்தச் சீரும் நொண்டி என்ற அவன் பெயருக்கேற்றவாறு நொண்டிச்சீராக-தடைபடுவதுபோல்(விட்டிசைத்தல் அமைந்திருக்கும். நொண்டி நாடகம் ஓர் இசைப் பிரபந்தம் ( கேயப் பிரபந்தம்). இதிலுள்ள சிந்துகள் யாவும் பாடுதற்காகவே ஏற்பட்டவை. சந்தத்தின் அமைப்பு முதலிலாயினும், ாற்றிலாயினும் சொற்கட்டுகளின் மூலமாக விளக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சிந்திலும் நொண்டியான சீர் முதல் அடியிலாயினும், இரண்டாம் அடியிலாயினும் அல்லது ஈற்று அடியிலாயினும் காணப்படும். நொண்டிச் சீரின் கால அளவிற்கு முந்தின காத்தின் இசையே பாடப்பெறும்.

சிந்துப் பாடல்கள் இரண்டடியால் நடைபெற வேண்டும். சீதக்காதி நொண்டி நாடகத்திலுள்ள பாடல்கள் இவ்வாறுதான் அமைந்துள்ளன. ஆனால், அந்நாடகத்தின் காப்பு, கடவுள் வணக்கம், பெரியோர்களின் வணக்கம் இவற்றின் பாடல்கள் (8 பாடல்கள்) 14 சீர்களாலான இரண்டு அடிகளால் அமைந்துள்ளன. இவற்றில் நொண்டியான சீர்கள் முதலடியிலும் இரண்டாம் அடியிலும் காணப்படுகின்றன. (எ-டு: திருவுலாவிய வகுதை நகர்வெரு

கருணை வாருதி தருமகுணநிதிச் செய்தக் காதியென் றெய்தக் காமனை

யே. கொண் டாடிடவே உருவ மேயெனி லுருவ மலனல

வருவ மேயெனில் அருவ மலனெனும் ஒருவனேதுணை ஒருவனேதுணை

யே......என் நாயகனே’

52. பாரதியார் கவிதைகளிலும் இவ்வகை உண்டு. 53. செய்தக் காதியின் தொண்டிநாடகம் - கடவுள் வணக்கம்