பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பாவேந்தரின் பாட்டுத்திறன்

27. கும்மி திருமங்கையாழ்வாரின் சொல்லுவன்” (பெரிதிரு. 2.9 என்ற காஞ்சி பரமேச்சுர விண்ணகரப் பதிகம் கும்மி அமைப்பைக் கொண்டுள்ளதாகவும் இதுவே கும்மிக்கு முன்னோடியாகலாம் என்றும் கூறுவர் டாக்டர் இரா. திருமுருகன்’. கும்மி என்ற சொல் தொடக்கத்தில் “கொம்மை என இருந்து, பின்னர் “கும்மி” என்றாகியது. “கொம்மை என்ற சொல்லை பழமொழி நானூறு (291, சீவகசிந்தாமணி (1230). நைடதம் (போர் - 7) என்ற நூல்களில் காணலாம். (கொம்மை கொட்டுதல்- கை குவித்துக் கொட்டி விரைந்து அழைக்கும் குறிப்பு. இதுவே சிறுமியர் விளையாட்டாகிய கும்மி என்றாகியது.வள்ளல் பெருமான் கொம்மி” என்றே வழங்குகின்றார். இச்சொல் இன்றும் ஆந்திராவிலும், செட்டி நாட்டிலும் வழக்கில் இருப்பதைக் காணலாம். கைகொட்டி ஆடும் ஆட்டத்தின் பெயர் அதில் பாடும் பாட்டுக்கு ஆனது பிற்காலம். கும்மியும் சிந்துப் பாடல் வகையேயாகும்.

நாலடிக்கும்மி (பாவேந்தர்) (எ-டு. கோயில் என்ன குளத்தில் என்ன பயன்?

கும்பிடல் யாவும் வெளிவேடம் - என்று வாயில் உரைத்தொரு நாகரிகம் - இங்கு

வந்து குதித்தது பாரதமே. கோயிலைச் சாமியை வேண்டு கிலாதவன்

கொள்கை பிறர்க்கு நலம்புரிதல் - இன்றி வாயினில் மந்திரம் ஞானம்வளர்ப்பது

வம்பெனச் சொல்லடி பாரதமே.” பாவேந்தர் கும்மிகளைக் “கதர் இராட்டினப்பாட்டு, பாரதிதாசன் கவிதைகள் - 1, இசையமுது - 1, முல்லைக்காடு, தேனருவி, பன்மணித்திரள்” ஆகிய நூல்களில் காணலாம்.” பாரதியாரைப்

57. பாவேந்தர் வழியா? பாரதி வழியா? - பக்கம் 36

58. தேசிய கீதம், நீச நாகரிகம்

59. பாரதியாரின் கும்மிகள், இரண்டடிகளால் இயன்றவை. “செந்தமிழ் நாடு” இரண்டடிக்கும்மி இரண்டடிகட்கும் இடையில் தனிச்சொல் பெரும்பாலான கும்.ழிகளில் காணப்படாதது. முதல் பாடலில்"எங்கள் தனிச் சொல் வருவது ,