பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி 103

பின்பற்றியே பாவேந்தரும் இரண்டடிகட்கு இடையில் தனிச்சொல்லை நுழைத்துள்ளார். மேற்காட்டப்பெற்ற பாடலில் என்று”, “இன்றி.” பயின்று வந்திருப்பதைக் காண்க.

28. ஆனந்தக் களிப்பு: இதுவும் சிந்து வகைப் பாடல்களில் ஒன்று. சிந்துப் பாடல்கட்கு இலக்கணம் வகுக்கப்பெறாத காரணத்தால் காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, கும்மி முதலியவற்றைப் போலவே இதுவும் ஒருவர் பாடிய மெட்டில் மற்றொருவர் பாடுவது என்ற முறையில் இயற்றப்பெற்று வருகின்றது. கடுவெளிச் சித்தரின் “பாபம் செய்யாதிரு மனமே”, தாயுமானவரின் சங்கர சங்கர சம்பு’ முதலியவற்றை மாதிரியாகக் கொண்டு, ஆனந்தக் களிப்புகள் இயற்றப்பெற்று வருகின்றன. பாரதியாரின் “வந்தே மாதரம் என்போம்” என்ற பாடலின் தலைப்பில் தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு மெட்டு” என்று குறிப்பிட்டிருப்பது இதற்கு ஒரு சான்று. ஆனந்தக் களிப்புகளில் சில எடுப்பு, முடிப்பு ஆகிய உறுப்புகளுடனும் வேறு சில எடுப்பு இன்றியும் இயற்றப் பெற்றுள்ளன. இவ்வகையில் பாரதியாருடையவை இரண்டடிக் கும்மிகளாகவும், பாவேந்தருடையவை நான்கடிக் கும்பிகளாகவும் உள்ளன.

எடுப்பு (எ-டு) இந்தி எதிர்த்திட வாரீர் - நம்

இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர் இந்தி)

முடிப்புகள் முந்திய காலத்து மன்னர் - நம்

முத்தமிழ்நாட்டினில் தொத்திடு நோப்போல் வந்த வடமொழி தன்னை - விட்டு

வைத்ததனால்வந்த தீமையைக் கண்டோம்

(இந்தி) செந்தமிழ் தன்னில்இல் லாத - பல

சீர்மைக் கருத்துகள் இந்தியில் உண்டோ? எந்த நலம்செய்யும் இந்தி? - எமக்

கின்பம் பயப்பது செந்தமிழ் அன்றோ?” (இந்தி) 60. பன்மணித்திரள் - 34