பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பாவேந்தரின் பாட்டுத்திறன்

முடிப்பில் இரண்டு அடிகட்குப் பிறகு எடுப்பு வருவதே, இவை இரண்டடிக் கண்ணிகளாக இருப்பதுதான் இயல்பு என்பதைக் காட்டும்.

இவ்வகைப் பாடல்களைப் பாரதிதாசன் கவிதைகள் - 1, 4, முல்லைக்காடு, தேனருவி, பன்மணித்திரள், தமிழுக்கு அமுதென்று பேர்” ஆகிய நூல்களில் காணலாம்.”

29. தென்பாங்கு நம் கவிஞர் பெருமான் பாட்டியற்றுவோர் (19) தமிழின் பெருமைகளை,

வியத்தகுசெந் தமிழாலே

வெல்லத்துத் தென்பாங்கில் பாடல் வேண்டும்’ என்று கூறுவதில் “தென்பாங்கு” என்ற பாவகையைக் காண்கின்றோம். தென்தமிழ் நாட்டில் மண்ணின் மணம் வீசும் பாடல் என்ற பொருளில் இவ்வகை நாட்டுப்புறப் பாடில்கட்குத் தென்பாங்கு” என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. இதுவும் சிந்துப்பாடல் வகையில் அடங்குகின்றது. பொதுவாக வரும் சிந்துகளிலும் சற்றுக் கூடுதலான இயைபும், மீண்டும் வந்த சொல்லும் தொடரும் மடங்கி வருதலும் இதன்

(எ-டு: “விண்மீதில் அண்ணாந்த குன்றம் - அதனை

மெருகிட்டு வைத்தசெங் கதிர்தான் ஒண்ணிழல் செய்திடும் சோலை - அதனை ஒனியில் துவைத்ததும் காண்க!”

“கண்காணும் ஓவியம் அனைத்தும் - அழகு காட்டப் புரிந்ததும் கதிர்தான்! மண்ணிற் பிறந்தோர் எவர்க்கும் - பரிதி வாய்த்திட்ட அறிவாகும்” என்றாள்’

61. பாரதியாரிடமும் இத்தகைய ஆனந்தக் களிப்புகளை “வந்தே மாதரம்”,

“தமிழ்த்தாய் ஆகிய தலைப்புகளில் காணலாம்.

52. தமிழியக்கம் பக்கம் 95

53. தமிழச்சியின் கத்தி-12 வானப்படம்-2