பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி 107 வேற்றுமைகள்: (1) சிந்துப் பாடல்களின் அசைகள் குறிப்பிட்ட அளவுக்கே நீளும். உருப்படிகளில் இந்நீட்டத்திற்கு அளவில்லை; (2) சிந்துகளில் எடுப்பு (பல்லவி), தொடுப்பு (அநுபல்லவி), முடிப்பு (சரணம்) என்ற உறுப்புகள் இல்லை; உருப்படிகளில் இவை உண்டு; (3) சிந்துகளில் தாளத்திற்கு மட்டுமே முதன்மை தரப்படும்; உருப்படிகளில் தாளத்திற்கும் இசைக்கும் முதன்மை தரப்பெறும்.

உருப்படியின் வளர்ச்சியில் எடுப்பு முடிப்புடன் கூடிய வகை தொடக்கத்தில் உருவாகியிருக்க வேண்டும்; பின்னர் தொடுப்பு இணைந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.

பாவேந்தர் பாடல்களில் முதல் வகையைச் “சுப்பிரமணியர் துதியமுது, கதர் இராட்டினப் பாட்டு, பா.தா. கவிதைகள் - 1, 2, 4, இசையமுது - 1, 2, குடும்ப விளக்கு, முல்லைக்காடு, தேனருவி, இளைஞர் இலக்கியம், பன்மணித்திரள், காதல் பாடல்கள், குயில் பாடல்கள், ஒரு தாயின் உள்ளம் மகிழ்கின்றது. தமிழுக்கு அமுதென்று பேர், நாள் மலர்கள், புகழ் மலர்கள், வேங்கையே எழுக” ஆகிய நூல்களில் காணலாம்.”

33. எடுப்பு, தொடுப்பு, முடிப்புகளுடன்: உருப்படிகளில் எடுப்பும் தொடுப்பும் ஒரு கண்ணியாக (ஒரே எதுகையுடன்) அமையும், முடிப்பு ஒன்று அல்லது பல கண்ணிகளாக அமையும். முடிப்பின் பிற்பகுதியைப்போல் தொடுப்பின் இசையமைப்புக் காணப்படும். அதாவது இப்பகுதியில் இசை சமமண்டிலத்திலிருந்து (மத்திமதாயி) வலிவு மண்டிலத்திற்குள் (தாரத்தாயி) சென்று உலவும். எனவே, ஒரு பண்ணின் நரம்புகளை எல்லா மண்டிலங்களிலும் கேட்டுச் சுவைக்க இது நல்ல வாய்ப்பாகும்.

பாவேந்தரிடம் இவ்வகையைச் “சுப்பிரமணியர் துதியமுது, கதர் இராட்டினப்பாட்டு, பாரதிதாசன் கவிதைகள்-1,2,4, குடும்ப விளக்கு கடற்மேற் குமிழிகள், முல்லைக்காடு, இசையமுது - 1, 2, பொங்கல் வாழ்த்துக் குவியல், தேனருவி, பன்மணித்திரள், காதல் பாடல்கள், குயில் பாடல்கள், ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, தமிழுக்கு

70. பாரதியாரிடமும் இவை அதிகமாகக் காணப்பெறுகின்றன.