பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பாவேந்தரின் பாட்டுத்திறன்

“தமிழியக்கம் அறுசீர் விருத்தத்தால் ஆனது.

“கண்ணகி புரட்சிக் காப்பியத்தில் (ஒரு வண்ணப்பா தவிர) அனைத்தும் எண்சீர் விருத்தங்கள்.

“மணிமேகலை வெண்பா’ (ஒர் இன்னிசை வெண்பா தவிர) அனைத்தும் நேரிசை வெண்பாக்கள்.

“காதலா? கடமையா ?” என்னும் நூல் ஆசிரியப்பாக்களால் நடைபெறுகின்றது.

“தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு என்ற சிறிய நூல் மட்டுமே முழுவதும் சிந்துப் பாடல்களால் இயன்றது; அதுவும் பாடிப் பரப்புவதற்காக எழுதப் பெற்ற இசைப் பாட்டுகள் என்பதால்.

பாவேந்தர் பாடல்களின் அடிகள் 40600 எனக் கணக்கிட்டுள்ளனர். கம்பராமாயணத்தின் அடிக்கணக்கு 41472 (மிகைப்பாடல்களை நீக்கி, இவற்றால் நம் கவிஞர் பெருமான் கவிச் சக்கரவர்த்தி கம்பர் அருகில் வருகின்றார்; இதனால் இவர் “இருபதாம் நூற்றாண்டின் கவிச்சக்கரவர்த்தி” என்று போற்றப்படும் பெருமையையும் அடைகின்றார்.