பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைத்திறன் Y 113

நேரிடும்பொழுது அதன்கண் அமைந்த உயர்ந்த தன்மையினையே ஒப்புமையாகக் கொண்டு உயர்ந்த குறிப்புப் பட உவமமும் செய்தல் வேண்டும் என்பதைக் குறிப்பாற் புலப்படுத்தியுள்ளனர் இலக்கணப் புலவர்கள். சிறந்த உவமை, பொருளின் தன்மையைத் தெளிவாக விளங்க வைப்பதுடன் அதனைச் சிறப்பிக்கவும் செய்யும் என்பதை நாம் உள்ளத்தில் இருத்துதல் வேண்டும்.

உவமை நன்கு பயன்படுத்தப்பெற்ற பிறகு உவமையின் குறுக்கம் தோன்றத் தொடங்கியது. இக்குறுக்கத்தையே இலக்கண நூலார் “உவமைத்தொகை” என வழங்குவர். “போல”, “புரைய” என்பன போன்ற உவம உருபுகள் வெளிப்படையாகக் காணப்படுங்கால் “alu விரி” என்றும், இவை தொக்கி வரும்பொழுது “உவமைத்தொகை” என்றும் வழங்கப்பெறுகின்றன. “தாமரை அன்ன முகம்” என்பது உவம விரி. “தாமரை முகம்” என்பது உவமைத்தொகை தொல்காப்பியர் உவம உருபுகள் முப்பத்தாறினை தொகைப்படுத்தி அவற்றுள் அடங்காதனவும் உள எனக் குறிப்பிடுவர். மேலும், அவர் அவற்றினை வகைப்படுத்தி வினை, பயன், மெய், உரு ஆகிய உவமைகட்கு இன்னின்னவை சிறந்தவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாளடைவில் இவ்வுவம உருபுகளின்றி உவமை வழங்கியது. மழைவண்கை, பொன்மேனி, துடியிடை என்பன போன்ற உவமைத் தொகைகள் வழக்காற்றில் வந்தன; உவம உருபுகளுடன் சேர்த்துக் கூறியதைவிட உருபின்றிக் கூறுவதற்கு வன்மை அதிகம் உண்டு என்பதை மறக்கலாகாது. “பொன் போன்ற மேனி” என்று கூறும்பொழுது மனத்தில் எழும் உணர்ச்சிக்கும் “பொன் மேனி’ என்று கூறும்பொழுது எழும் உணர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தினர். இவ்வாறு உவமைத்தொகையும் உவமவிரியுடன் சேர்ந்து சிலகாலம் வழங்கி வந்தது.

உருவகம்: நாளடைவில் உவமப் பொருளையும் உவமிக்கப் பெறும்பொருளையும் வேறு வேறாகக் காணாமல் ஒன்றிலேயே மற்றொன்றினைக் காணும் முறை தோன்றியது. “தாமரை முகம்” என்பதை மாற்றி ‘முகத்தாமரை” என்று கூறத் தொடங்கினர்.