பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைத்திறன் Y 117

மலையின் உச்சியை நோக்கிப் பாய்கின்றான். விட்டெறியும் கல்வின் வேகம் வள்ளிச்சுமையுடன் பாய்ந்து செல்லும் குப்பனுக்கு அற்புதமான உவமையாக அமைகின்றது.

சஞ்சீவி பர்வதத்திற்குக் குப்பனும் வள்ளியும் வந்தபிறகு நடைபெற்ற அதிசயம் என்ன என்று வள்ளி கேட்க, குப்பன் உரைக்கின்றான்:

“என்னடி வஞ்சி: இதுவும் தெரியாதா? நாமிங்கு வந்தோம், நமக்கோர் நலிவின்றி மாமலையை அவ்வதுமார் துக்கி வழிநடந்து லங்கையிலே வைத்தது: ராமன் எழுந்ததும் இங்கெடுத்து வந்தே இருப்பிடத்தில் வைத்தது! கண்ணே! மலையைக் கடுகளவும் ஆடாமல் கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில்

வைப்பதுபோல் தந்திரமாய் மண்ணில் தலைகுனிந்து வைத்திட்ட அந்தப் பகுதிதான் ஆச்சரியம் ஆகுமடி”

என்கின்றான். இராமன் இலங்கையில் மேகநாதன் தொடுத்த நான்முகக் கணையின் வேகத்தால் மயக்கமுற்றிருந்தபொழுது மாருதி சஞ்சீவி பருவதத்தைத் தூக்கி வந்து, செயல் முடிந்ததும் அதனை மீண்டும் அதன் இருப்பிடத்தில் வைத்தது கண்ணாடிப் பாத்திரத்தைக் கல் தரையில் வைத்ததுபோல்” வைத்ததாகக் கூறும் உவமையின் அழகு அநுபவிக்கத்தக்கது. சில குடும்பங்களில் ‘மாமியார் - மருமகள்” போராட்டம் அமைதியாக நடைபெறும்; பேசாத பேச்சாகவும் இருக்கும். மருமகள் பித்தளை (வெண்கல)ப் பாத்திரத்தைச் சிறிது ஒலி எழும்படி (மாமியார் கேட்பதற்காக) தரையில் வைப்பதைக் கேட்கின்றோம். பார்ப்பனர் குடும்பங்களில் நடைபெறும் இதனை என் பார்ப்பன நண்பர் ஒருவர் மூலம் கேட்டதுண்டு.

9. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்- பக்கம் 12