உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாவேந்தரின் பாட்டுத்திறன்

தாவிநல் வாயிதழ் ஒரம் உயிர் தாக்கிடும் புன்சிரிப் பாளை” என்று பெண்ணைக் குறிப்பிடுவதில் இதனைக் காணலாம்.

முத்தாய்ப்பாக ஒர் அருமையான உவமை அமைகின்றது கவிஞர் வாக்கில், நீலியும் அன்னமும் (பாண்டியன் பரிசு படகில் ஏறி உலவச் செல்லுகின்றனர். திடீரென்று மழையும் காற்றும் கலந்து அடிக்கின்றன. இதன்ைக் கவிஞர்,

கிழக்கினைநோக்கிப்படகு செல்லும் போதில்

கேள்வி.இலார் நெஞ்சம்போல் இருண்டு, நீளும் வழக்குடையார் செல்வம்போல் மின்னி மாய்ந்து

வண்பொருளை இழந்தான்போல் அதிர்ந்து பின்னர் மழைக்கண்ணிர் உகுத்ததுவான் மேற்கி னின்று வந்ததுசெய் யாற்றினிலே பெரிய வெள்ளம் பழக்குலைமேல் எறிந்தகுறுந் தடியே போல

பாய்ந்ததொரு பெருங்காற்றுப் படகு நோக்கி” என்று கூறுவார். இதில் நான்கு உவமைகள் கையாளப் பெறுகின்றன. முதல் உவமை “கேள்வி இலார் நெஞ்சம்போல் இருண்டு”, “கற்றலில் கேட்டலே நன்று” என்று பழமொழி நானூறு கூறும் (பக்கம் 5). வள்ளுவர் கேட்டு ஞானம் பெறுவதை “செவிச் செல்வம்” (குறள். 41 என்று கூறுவர். “கற்றிலனாயினும் கேட்க” (குறள் - 414) என்று அறிவுறுத்துவர். கேள்வி இலார் நெஞ்சம் இருள் சூழ்ந்து கிடக்கும். கவிஞரின் “இருண்ட வீட்டில்” இதன் பரிணாமத்தைக் கண்டு மகிழலாம்.

இரண்டாவது உவமை: “நீளும் வழக்குடையார் செல்வம் போல் மின்னி அதிர்ந்து மாய்ந்து “வண் பொருளை இழந்தான் போல் அதிர்ந்து பின்னர் மழைக் கண்ணிர் உகுத்தது வான்”. ஒரு வழக்கு நீதி மன்றத்திற்குச் சென்றால் அஃது இரப்பர்போல் நீளும். ‘ழ்நிலையில் சரியான முடிவு இல்லையாயின் மேல்நிலை ன்றங்கட்குப் போகும். இந்நிலைகளில் கால தாமதம் மேலும் மேலும் 3. பன்.தா.கவிதைகள் - 3 பக்கம் 14 16. பாண்டியன் பரிசு - இயல்- 53 - பக்கம் 92