பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைத்திறன் . 121

நீண்டு கொண்டே போகும். பணம் கரைவதைச் சொல்லி முடியா. பழுதடைந்த தண்ணீர்க் குழாயில் தண்ணீர் ஒழுகுவதைப் போல் பணம் போய்க்கொண்டேயிருக்கும். எத்தனையோ விதவிதமான செலவுகள்! பன்னி உரைக்கில் பாரதமாக நீளும். நாஞ்சில் நாட்டு மருமக்கள் மான்மியம்” என்ற கவிமணியின் நூலில் வழக்குகளால் நேரிடும் செலவுகள் அற்புதமாகச் சித்திரிக்கப் பெற்றிருக்கின்றன. தேவகோட்டையைச் சேர்ந்த ஒருவர் வழக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவர் வழக்கும் இழுபறியாகக் கிடந்து நாற்பதாண்டுகட்கு மேல் நீண்டு நடைபெற்றதை அறிவேன். என் புரோ நோட் வழக்கு ஒன்று பத்தொன்பது ஆண்டுகள் நீண்டது. முடிவு ஏற்பட்டும் இழுபறி. பல நிலைகளில் பிரதிவாதியின் கையூட்டால் நீண்டு கொண்டே சென்றது. பிரதிவாதியும் இறந்தார். நீதி மன்றத்திற்கு வெளியே இரண்டாயிரம் தள்ளுபடி செய்து கணக்கு தீர்த்துக் கொண்டோம். இப்பொழுது “போபர்ஸ் வழக்கு” இதிகாசம்போல் நீண்டு கொண்டு போவது நாடறிந்த செய்தி! “வான் மழைக் கண்ணிர் உகுத்தது” என்பதால் வாதி கண்ணிர் விட்டுச் செலவு செய்கின்றான் என்ற குறிப்பும் தொக்கி நிற்கின்றது. வேண்டுமானால் கவிஞரின் இந்த உவமையை எப்படி எப்படியெல்லாம் விரித்துப் பொருள் கொள்ளலாம்.

மூன்றாவது உவமை: “பழக்குலை மேல் எறிந்த குறுந்தடியே போல” குறுந்தடியை வேகமாக எறியும்போது அதன் செல்லும் வேகத்தைக் காணலாம். அது பழக்குலையைத் தாக்கும்போது பழங்கள் சிதறி ஒடுவதோடன்றி சில பழங்கள் சிதைந்தும் போகும். பெருங்காற்றுப் பாய்ந்ததால் ஒடத்திற்குப் பேராபத்து நேரும் நிலை ஏற்பட்டது. வேலன் காப்பாற்றினான். மங்கையர் தப்பினர்.

இந்தப் பாடல் “ஆழிமழைக் கண்ணா” என்ற திருப்பாவையின் (பாசுரம் - 4) மழைப்பாட்டிலுள்ள உவமைகளையும் “முன்னிச்சுருக்கி” என்ற திருவெம்பாவையின் (பாடல் - 16) மழைப்பாட்டிலுள்ள உவமைகளையும் நினைவுகூரச் செய்கின்றது.

உவமைத் தொகை: உவமைத்தொகையாக வரும் உவமைகளிலும் கவிஞரின் கைவண்ணத்தையும், கருத்து