பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பாவேந்தரின் பாட்டுத்திறன் வண்ணத்தையும் கண்டு மகிழலாம். கொடுவாள் மீசை இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. இந்த வகையில் கவிஞர் படைப்புகளில் எண்ணற்ற உவமைகள் உள்ளன.இவற்றுள் பலவகை உள்ளங்களைக் காட்டும் திறன் அற்புதமானது. அவை: கடுகு உள்ளம்,துவரை உள்ளம், தென்னையுள்ளம், மாம்பிஞ்சியுள்ளம், தாயுள்ளம் என்பவை.

கடுகு உள்ளம்: “உலக ஒற்றுமை” என்ற பாட்டில்,

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு

சம்பாத்தியம் இவைஉண்டு தானுண் டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்

தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்! பொருள் வெளிப்படை. இவனால் இவன் வதியும் தெருவிலுள்ளார்க்கும் பயன் ஒன்றும் இல்லை.

துவரை உள்ளம்: இதனைக் கவிஞர்,

கன்னலடா என்சிற்றுார் என்போன் உள்ளம் கடுகுக்கு நேர்மூத்த துவரை உள்ளம் தன் ஊரில் மட்டிலும் அக்கறை கொண்டவனது உள்ளம் துவரை உள்ளமாகும். கடுகு உள்ளத்தை விடச் சற்றுப் பெரியது.

தென்னை உள்ளம்: இதனையும் கவிஞர் கூறுவார்: தென்னையுள்ளம் ஒன்றுண்டு தனதுநாட்டுச்

சுதந்திரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்தல்: இத்தகைய உள்ளத்தைக் கொண்ட நாட்டுத் தலைவர்களும் வீட்டுத் தலைவர்களும் உள்ளனர். “குவைத்” என்னும் நாட்டை ஆக்கிரமித்துத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்ட “இராக்” நாட்டுத் தலைவனின் உள்ளம் இத்தகையது.

மாம்பிஞ்சு உள்ளம் இந்த உள்ளத்தைக் கொண்டவர்கள்பற்றி:

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,

அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க

17. அழகின் சிரிப்பு - பக்கம் 11 18. பாதா.கவிதைகள்- முதல் தொகுதி-பக்கம் 129