உவமைத்திறன் . 123
வாயடியும் கையடியும் வளரச் செய்வார்
மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம்! என்று காட்டுவார். பொருள் வெளிப்படை
தாயுள்ளம்: இதுதான் தலையாய உள்ளம். இதனை,
தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் “ஒன்றே” என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! அங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே என்று காட்டுவார்; இங்கே ஐந்து உள்ளங்களை உவமத்தொகை” யாகக் காட்டும் அற்புதம் நம்மை வியக்க வைக்கின்றது. ஒரு விதத்தில் மன்பதைக்கும் அறிவு கொளுத்துவதாகவும் அமைகின்றது.
பா.தா. கவிதை முதல் தொகுதியில் வரும் இவ்வகை உவமைகள்: தேனிதழாள், பானல் விழி (பக்கம் 18), இருட்காடு (19), வேல்விழி, பால்மொழி, பாளைச் சிரிப்பு (24), முல்லைச் சிரிப்பு (76), மாணிக்கப்பரிதி (93), கற்கண்டு மொழி, கற்கண்டுக் கவிதை (102, கெண்டை விழிகள் (111), தேன்மலர்ச் சோலை (154), வயிரக் குன்று (16), வண்டு விழி, ஒளி விழி (166), களைவாய் (168, பொன்னுரசல் (180), பா.தா. கவிதை இரண்டாம் தொகுதியில் உள்ளவை: மலர்க்கை (18), பொன்னொளி (37), பாலுடல் (40), கனி இதழ் (47), முல்லைச் சிரிப்பு (56), தேன் கவிகள் ( 77), பொன் மலர்கள் (110). தங்க மாதுளை (124), கெண்டை விழி (126), தென்னம்பாளை சிரிப்பு (11)”. இஃது ஒரு புரட்சிகரமான உவமை இதுகாறும் எவரும் சொல்லாத உவமை. முதன் முதலாகக் கவிஞர் இந்த உவமையைக் கூறிய காலத்தில் அறிஞர் அண்ணா பல மேடைகளில் (1944-55) இதனைக் கூறிக் கவிஞருக்குப் புகழ் சேர்த்ததை நேரில் பலமுறை கேட்டதுண்டு. வாழைத் துடைகள் (21; “அழகின் சிரிப்பு” என்ற நூலை “உவமைச் சோலை” என்று சொல்லலாம்.
உருவகம்: பாவேந்தர் பாடல்களில் உருவகங்களுக்கும் குறைவில்லை. “அழகின் சிரிப்பு” என்னும் நூலில் பல்வேறு வகை
19. பா.தா.க. மூன்றாம் தொகுதி-பக்கம் 11