பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பாவேந்தரின் பாட்டுத்திறன் அவற்றின் விகற்பங்களையும் கூறுகின்றது. மாறனலங்காரம்’ அறுபத்தாறு அணிகளை எடுத்துரைக்கின்றது. குவலயானந்தம்’ என்னும் நூல் நூறு அணிகளுக்கு இலக்கணம் கூறுகின்றது. அவற்றுள் பல வேண்டாத பிரிவுகளாக உள்ளன.

இது கருதியே தொல்காப்பியர் அணிகளை அறுபதும் நூறுமாக வகுத்துப்பாகுபாடு செய்யாது பல அணிகளுக்கும் அடிப்படையாகவுள்ள உவமை என்ற ஒன்றினை மட்டிலும் நன்கு விளக்கினார். தொல்காப்பியத்தில் “உவம இயல்” என்ற ஒன்றைத் தவிர, அணியைக் கூறும் வேறு பிரிவே இல்லை. உவமையிலிருந்தே ஏனைய அணிகள் தோன்றின என்பதை,

உவமை என்னும் தவலரும் கூத்தி பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து காப்பிய அரங்கிற் கவினுறத் தோன்றி யாப்பறி புலவர் இதயம் தீப்பது மகிழ்ச்சி பூப்பநடிக் கும்மே” என்ற வடமொழி அப்பைய தீட்சிதரின் சித்திர மீமாம்சைக் கூற்றாலும் அறியலாம். பாவேந்தரின் பாடல்களை “உவமச்சுரங்கம்” என்று சொல்லி வைக்கலாம். தொட்ட இடம் எல்லாம் அது தட்டுப்பட்டு படிப்போருக்குச் சாக்லெட் சுவையைத் தந்துகொண்டேயிருக்கும்.

22. தொல், பொருள். உவம இயல் காண்க. 23. செந்தமிழ்-தொகுதி-7; பக்கம் 144