பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாவேந்தரின் பாட்டுத்திறன்

கக்கத்தில் மணிக்குலை கவினுறத் தொங்க அடைத்துள் அழகிய கழுகினம் வானைத் துடைத்துத் துசி போக்குவன போலும்! வெப்பம் விலக்கின, நிழல்முடி கவிந்தன, கப்பம் கட்டின குளிர்காற்று வைத்தே! என்னரும் வண்டி எழிலமைந் திருப்பினும் விரைந்து செல்லினும், விரிந்து பரந்து குளிர்தரு கமுகின் கூட்டம் இல்லையேல் என்பயன்? இயற்கையின் ஆதரவு செயற்கைக்குத் தேவை என்பது சாவாத உண்மை! குன்றின் அடிநிலை திமிர்ந்து பார்த்தேன் தோன்றிய தென்ன? - தமிழகத் தொன்மைதான்! நெடிய குன்றத்தின் நேர்ஒரே பக்கம் வளைந்து வளைந்து செல்லும் வழியே எனது வண்டி மேல்நோக்கி ஏறியது - என்று சொல்லும் சொல், மெய் இல்லை! சுடரும் நிலவும் தோன்றிய நாளில் தோன்றித் துலங்கும் குன்றுர் உச்சிக்கு - இங்கிருந்து சென்று மீண்டும் அங்கிருந்து சுவடு காண மீளும் என்றன் அருமை தமிழக முதியோன் இன்று தன்னலம் நீக்கி, என்றன் வண்டியை வளைந்ததன் முதுகிற் சுமந்து சாயாது, சறுக்காது, தானிட்ட சுவடு மாறாது, மறவாது, மலையுச்சி நோக்கி ஏறுவான் ஆனான். ஏகுவேன் ஆனேன்! நின்றி ருக்கும் அந்தக் குன்றின் அடிநிலை தாண்டி நடுநிலை சென்றேன்; குனிந்து கீழ்ப்புறம் நோக்கினேன்; குரல் எடுத்துக் “கீழுறு தமிழரே மேல்வா ரீரோ?” என்று கூற எண்ணினேன்! “கேட்குமா?” என்று வாளா இருக்க லானேன்!