பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

வருணனைத்திறன் Y 131 இன்று வழியின் இருபுறத்தும் நின்ற காடுகள் பாடின! அழகு காட்டின! ஆடின கிளைத்தழை தோகை யாகவே! பக்க வாட்டிற் பள்ளத்தி னின்று மிக்கு நீண்ட கொடிப்பூ மின்னின! நெட்டை மரமொன்று நிலத்தி னின்று எட்டி யானிருந்து அளவாய் எழுந்து, தன்தலை தாவி என்நிலை நோக்கி மகிழ்ந்தது மகனுக்கு மகிழ்தந்தைப்போல்:

இதுதான் குன்றுனர் என்றனர்! நடுப்பகல் பதினொரு மணிவெயில் பாய்ந்த தாயினும் குளிர்ந்த காற்று வெப்பினைக் குறைத்தது:

நன்று விரிந்த இந்தக் குன்றுார் குன்றின் உச்சியில் இருந்த கொள்கையை எண்ணுத் தோறும் வியப்பை ஈந்தது.

வெயிலின் வெப்பம் எந்த நாளிலும் துயரம் விளைப்பதில்லை அங்கே!

வெப்பம் மிக்க தென்னாட் டார்கள் குளிர்ச்சிக்குச் செல்வது குன்று ராகும்!” உதகைக் காட்சிகள்: இந்த வாய்ப்பில் கவிஞர் உதகைக்கும்

சென்று அங்குள்ள காட்சிகளையும் வருணிக்கின்றார்.

5,

1943 மே மாதம் துறையூரில் பணியாற்றியபோது பள்ளி உயர்நிலை எய்தும் விஷயமாக திரு N.R. அரங்கநாத முதலியார் (மண்டல ஆய்வாளர். கோவை) இங்கு தங்கியிருந்தபோது அவரைப் பார்க்க இங்கு வந்தேன். நான் ஒரு நாள் மாலை வந்து அதிகாலை திரும்பியதால் இக்காட்சிகளை நுகர வாய்ப்பில்லை. ஆனால்,1968 மே திங்களில் நான்,மனைவி, செல்வர்கள் இருவருடனும் இங்கு வந்தபோது இக்காட்சிகளை அநுபவிக்க முடிந்தது. அக்காட்சி இன்னும் என் மனத் திரையில் பசுமையாகவே உள்ளது. நான் பாடாததால் அக்காட்சி என்னுடன் நின்று விட்டது. பாவேந்தர் பாடியதால் அது மன்பதைக்கு நிரந்தரமாகக் காட்டிக்கொண்டே உள்ளது.