பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பாவேந்தரின் பாட்டுத்திறன்

அழகிய குன்றுர்க் கப்புறம் அமைந்தது நீல மலைஎன நிகழ்த்தலும் அதையே

அடியி னின்று நெடுமுடி நோக்கினால் சிறிதாய்த் தோன்றும் இடத்தில் பெரிய நகரினைக் கண்டு தான் வியப் புறுகையில் என்னைவன் தோழர்கள் “இதுவியப் பன்று” பொன்னும், பன்னிற மணிகளும் பூவென்று மின்னும் பெரும்பரப்பு வியப்பாம்” என்றனர்.

ஊருக்கு அரைக்கல் தூரம் நடத்தேன் தேரில் கண்டது மலர்வனம், மணிக்காடு: உச்சிக் குன்றின் பக்க வாட்டில் ஐந்துறு காணிப் பரப்பை “அழகு” மொய்த்து விளையாடக்குத்தகை பிடித்தது: திமிர்ந்தால் இலைஇலா நீலப் பூமரம்! கமழும் முத்துப் பந்தர்க் கவின்மரம்! மஞ்சள் பொடியை வாரி இறைக்கும் செம்மலர் மரங்கள் சிறுபட்டாளம் கண்ணோடு சென்று மனத்தைக் கவர்ந்தன.

கொன்றை பூத்த தங்கக் கோவை தென்றலால் ஆடும், வண்டெலாம் பாடும்

வண்ண மலர்களின் அழகில் வளைந்தஎன் கண்ணைக் கீழ்ப்பாய்ந்த வரியனில் கவிழ்த்ததால் பன்மலர் நிலத்தோவியம் பலித்தது

பச்சைமணிச் சிற்றி லைச்செடி வரிசை வட்டங் குறிக்க அதனுள் மஞ்சள், சிவப்பு, நீலம் ஒளிர்படு மலர்வகை அப்பட்டம் பன்மணி இழைப்போன் அழுத்திய மாதர் தலையணி வட்டமே யாகும்.

7. Botanical Garden என்ற இடத்தைக் குறிப்பிடுகின்றார். 1968 மே மாதம் நானும் என் குடும்பமும் இந்த மலர் வனத்தை அநுபவித்து மகிழ்ந்தோம்.