பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 Y பாவேந்தரின் பாட்டுத்திறன்

இப்படித் தங்கின இடத்தின் சூழ்நிலையின் காட்சிகளை வருணிப்பார். கற்பனையும் தன்மை நவிற்சியும் கலந்த வருணனை, பல்லாண்டுகட்குப் பின்னர் அதனைப் படிக்கும் நம்மை மானசீகமாக அக்காட்சிகளை நேரில் அநுபவிக்கும் வாய்ப்பினைத் தருகின்றது. இதுவே கவிஞரின் சொல்லோவியத்தின் மந்திர ஆற்றல்! செப்பரிய செந்நாப் புலவரின் சொற்றிறம்!

(2) மாமல்லபுரச் செலவு ஏறத்தாழ 15 ஆண்டுகட்கு முன்னர் (1934) ஒரு சமயம் முழுநிலவு தோன்றும் ஓரிரவில் தோழர் ப. சிவாநந்தம், குருசாமி குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி. வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி.சிதம்பரனார்,எஸ்.வி.இலிங்கம், நாான துரைக்கண்ணன் இவர்களுடன் சென்னையிலிருந்து மாலை 4 மணிக்குச் சென்னை பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி கவிஞர் மாமல்லபுரம் சென்றார். அப்பெருந் தோணியைக் கரையோரமாகக் கயிறு பற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் கழிவிரக்கம் கொள்ளத்தக்க காட்சி, அதையும், ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதப்பெற்றது இப்பாட்டு.

இதில் உள்ள வருணனை மிகச் சிறந்தது என்று சொல்ல இயலாது போயினும், பாடலைப் படிக்கும்போது நாமும் தோணியில் செல்வதுபோன்ற அநுபவம் அடைகின்றோம். உயிரூட்டம் ஏறிய பாடல்:

சென்னையிலே ஒருவாய்க்கால் - புதுச் சேரி தகர்வரை நீளும். அன்னத்தில் தோணிகள் ஓடும் - எழில் அன்னம் மிதப்பது போல. என்னரும் தோழரும் நானும் - ஒன்றில்

8. பாதாக இரண்டாம் தொகுதி - பக்கம் 37, 23.1152 நாளிட்ட பாரதிதாசன் முன்னுரையுடன் வெளிவந்த முதற்பதிப்பு 1987-ல் வெளிவந்த பாரிநிலையப் பதிப்பு வரை இப்பாடல்“மாவலிபுரச் செலவு” என்றே வெளிவந்துள்ளது.தவறு கருதி நான் இவ்வாறு மாற்றியுள்ளேன்.

9. நான் முசிறியில் பள்ளியிறுதித் தேர்வு பெற்று (1934) திருச்சி புனித

சூசையப்பர் கல்லூரியில் சேர்ந்த ஆண்டு.