பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத்திறன் 435

ஏறி அமர்ந்திட்ட பின்பு சென்னையை விட்டது தோணி - பின்பு தீவிரப் பட்டது வேகம்

தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள் சென்றிடும்போது விசாலச் சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெயில் துவிடும் பொன்னொளி கண்டோம் நெற்றி வளைத்து முகட்டை - நட்டு நீரினை நோக்கியே நாங்கள் அற்புதம் கண்டு மகிழ்த்தோம் - புனல் அத்தனை யும்ஒளி வானம்.

39;t

“சஞ்சீவி பர்வதச் சாரல் சாற்றும் சுவடி திறந்து சஞ்சார வானிலும் எங்கள் - செவி தன்னிலும் நற்றமிழ் ஏற்றி அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க ஆசையி னால்ஒரு தோழர் செஞ்சுடர் அச்சமயத்தில் - எம்மைச் செய்ததுதான் மிக்க மோசம்.

- என்று

மிக்க முரண்கொண்ட மாடு - தன் மூக்குக் கயிற்றையும் மீறிப் பக்க மிருந்திடும் சேற்றில் - ஓடிப் பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச் சக்கரம் போலிருள் வானில் - முற்றும் சாய்ந்தது சூரிய வட்டம்: புக்க பெருவெளி எல்லாம் - இருள் போர்த்தது! போனது தோணி வெட்ட வெயிலினில் நாங்கள் - எதிரே வேறொரு காட்சியும் கண்டோம்; குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்

10. இது கவிஞரின் அற்புதமான கவிதைகளில் ஒன்று.