பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 v. பாவேந்தரின்பாட்டுத்தின்

கத்தல் சரித்ததோர் ஈத்தும் மட்டைச் சுரங்கள் பிணைத்தே-இன்ப வார்த்தைகள் பேசிடும் போது கட்டுக் கடங்கா தலைப்பைப் பனை கலகல வென்றுகொட்டிற்றே.

எட்டிய மட்டும் கிழக்குத் திசை ஏற்றிய எங்கள் விழிக்குப் பட்டது கொஞ்சம்; வெளிச்சம் - அன்று பெளர்ணமி என்றதும் கண்டோம் ஆட்டக் குளிர்மதி எங்கே - என்று வரவு நோக்கி இருந்தோம் ஒட்டக மேல்அர சன்போல் - மதி ஒர்மரத் தண்டையில் தோன்றும்.

முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று முற்றும் சிவந்தது சொல்வாய்? இத்தனை கோபம் நிலாவே - உனக்கு ஏற்றிய தார்என்று கேட்டோம். உத்தரமாக எம்நெஞ்சில்-மதி ஒன்று புகன்றது கண்டீர். சித்தம் துடித்தது நாங்கள்- பின்னால் திரும்பிப் பார்த்திட்ட போது.

தோணிக் கயிற்றினை ஒர்ஆள் - இரு தோள்கொண்டிழுப்பது கண்டோம் காணச் சகித்திட வில்லை - அவன் கரையோடு தடத்திடுகின்றான். கோணி முதுகினைக் கையால் - ஒரு கோல்துணி யால்மலை போன்ற தோணியை வேறொரு வன்தான்-தள்ளித் தொல்லையுற்றான்பின் புறத்தில்

இந்த உலகினில் யாரும் நல் இன்ப மெனும்கரையேறல்