பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத்திறன் Y. 137

சந்தத முந்தொழிலாளர் - புயம் தரும்து னையன்றி வேறே எந்த விதத்திலும் இல்லை - இதை இருபதுதரம் சொன்னோம். சிந்தை களித்த நிலாவும் - முத்துச் சித்தொளி சிந்தி உயர்ந்தான். நீல உடையினைப் போர்த்தே - அங்கு நின்றிருந் தாள் உயர் விண்னாள் வாலிப வெண்மதி கண்டாள் - முத்து மாலையைக் கையி லிழுத்து நாலு புறத்திலும் சித்தி - ஒளி நட்சத்தி ரக்குப்பை யாக்கிப் பாலுடல் மறையக் காலை - தாங்கள் மாமல்லபுரக்கரை சேர்ந்தோம். இந்தப் பாடல் ஒர் அற்புதமான சொல்லோவியம். அன்று பெளர்ணமியாதலால் இருட்டில் செல்லும் அவர்கள் நிலாவைத் தேடுகின்றனர். ஒரு மரத்தின் சந்தில் சந்திரன் தென்படுகின்றான். இஃது ஒட்டகத்தின்மீது ஒர் அரசன் இவர்ந்து வரும் காட்சியையொத்துள்ளது சந்திரன் தோன்றும் காட்சி என்று கவிஞர் வருணிக்கும்போது நம் உள்ளம் கொள்ளை கொள்ளப்படுகின்றது: பரவசம் அடைகின்றோம்.

‘எருத்துப் புண் வலி அதைக் கொத்தும் காக்கை அறியாது’ என்பதுபோல் முதலாளி, தொழிலாளி படும் தொல்லைகளை அறியான். தான் அநுபவிக்கும் இன்பக் களிப்பில் எதையும் சிந்திக்க அவனுக்கு நேரம் இல்லை. மகிழ்ச்சி போதை அவன் மண்டையில் அவ்வளவு ஏறி நிற்கின்றது. ஆனால், படகில் செல்லும் கவிஞர் ஒருவன் தோணிக் கயிற்றினை தோள்கொண்டு வலிப்பதையும், அவன் கரையோடு நடந்து செல்லுவதையும் கண்டு கழிவிரக்கம் கொள்ளுகின்றார். வேறொருவன் மலை போன்ற தோணியை ஒரு கோல் கொண்டு தள்ளித் தொல்லையுறுவதைக் காண்பதற்கும் கவிஞரின் மனம் சகிக்கவில்லை. தொழிலாளர் இயக்கத்தை முறுக்கி விடுகின்றவர் அல்லவா?