பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பாவேந்தரின் பாட்டுத்திறன்

நிலா தோன்றும்போது அதன் சுடர் சற்றுச் சிவந்து காணப்படும் அதைக் கவிஞர் நிலவின் கோபம்’ என்று வருணிக்கின்றார். இதற்குக் காரணம் என்ன? இருவர் படகினை மிக்க சிரமத்துடன் நடத்திக்கொண்டு செல்ல, அதனைச் சிறிதும் கருதாது, படகில் செல்வோர் மகிழ்ச்சியுடன் செல்லுகின்றனரே என்று நிலா சினங் கொள்ளுவதாகக் கருதுவது கவிதைச் சுவைக்கு மெருகேற்றி விடுகின்றது.

சிறிது நோத்தில் நிலாவும் தனது முத்துச் சிந்தொளி வீசிக் கொண்டு உயர்ந்து செல்லுகின்றான். அருகில் காணப்படும் நீலவான் காட்சியைக் கவிஞர் நீல உடையினைப் போர்த்திக் கொண்டு விண்ணாள் நின்று கொண்டிருக்கின்றாள் என்று வருணிப்பது கவிதையின் மாற்றைப் பன்மடங்கு உயர்த்திவிடுகின்றது.

(ஆ) நின்றுகொண்டே வருணிப்பவை

இவற்றுள்ள சிலவற்றைப் பாடுபொருளாகப் (இயல் - 2) பகன்ற இடத்திலும் இயற்கையை இயம்பின இடத்திலும் (இயல் - 9) காட்டினேன். மேலும் சிலவற்றைப் பல்வேறு தலைப்புகளில் ஈண்டுக் காட்டுவேன்.

குழந்தை குழந்தையைப் பாடாத கவிஞர்களே இல்லை. “கண்ணம்மா என் குழந்தை” என்ற பாடலில் குழந்தையைச் “செல்வக் களஞ்சியம்”, “பிள்ளைக் கனியமுது”, ‘பேசும் பொற்சித்திரம்”,"ஆடி வருந்தேன்” என்றெல்லாம் வருணிப்பார்பாரதி. கடவுளைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ்பாடி மகிழ்ந்தனர் பிற்காலக் கவிஞர்கள். சங்க காலத்தில் கவியரங்கேறிய பாண்டியன் அறிவுடைநம்பி மக்கட்பேறின்றி.பின்பு பெற்று.அதனால் இன்புற்றவன். தான் பெற்ற இன்பத்தைப் பிறர்க்கும் காட்ட எண்ணினான். இம்மை யுலகத்து இசையொடும் விளக்கி மறுமை உலகமும் மறுவின்றி எய்துப செறுதரும் விழையும் செயிர்தீர்க் காட்சிச் சிறுவர் பயந்த செம்ம லோரெனப்

11. கண்ணன் பாட்டு - 8 (பாரதி)