பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பாவேந்தரின் பாட்டுத்திறன்

இந்தக் கவிதையைப் படிக்கும் நாமும் நம்மை மறந்து அநுபவிக்கின்றோம். களவு முறையில் வெண்ணெய் உண்ட குழந்தைக் கண்ணனை யசோதைப் பிராட்டி தாம்பு கொண்டு அடிப்பதற்குத் தயாரானபோது அக்கண்ணனது “எள்கு நிலையும், வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும், அழுகையும், அஞ்சி நோக்கும் அந் நோக்கும், அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும் தொழுகையும் - இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டது’ போன்ற அதுபவத்தைப் பெறுகின்றோம்.

குயில்: “மயிலுக்குத் தோகை அழகு, குயிலுக்குக் குரல் இனியது” என்பார்கள். என்றோ ஒரு நல்ல மனநிலையில் கவிஞர் குயில் ஒன்றைக் காண்கின்றார். அழகான பாடல் பிறக்கின்றது!

மின்னும் கருமேனி விண்ணின் மிதப்ப, இரு சின்னஞ் சிறுவிழியாம், செம்மணிகள் நாற்புறத்தும் தோக்க விரைந்து, கதிரும் நுழையாத பூக்கமழும் சோலை புகுவது கண்டேன்; கூகூ எனும்அக் குயிலின் குரல்கேட்டேன்; ஆக்காத நல்லமுதோ? அடடாநான் என்சொல்வேன்! விட்டுவிட்டொலிக்குமொரு மின்வெட்டுப் போல் நறவின் சொட்டொன்றொன் றாகச் சுவையேறிற் றென்காதில்

 ir கருநெய்தற் காட்டரும்பு போலும் குவிந்த இரண்டலகு தம்மிற் பிரிந்து குரல்எடுக்க வாயிற்செவ் வல்லி மலர்கண்டு நான்வியந்தேன்!

ஓயாது சுற்றுமுற்றும் பார்க்கும் ஒளிக்குயில்தான் இவ்வுலகம் இன்னல் நிறைந்ததென எண்ணிற்றா? எவ்வலியும் தன்னிடத்தே இல்லைஎன அஞ்சிற்றா? மாவின் கிளையை மணிக்காலால் தான்பற்றிப் பாவின் இனிமைதனைப் பாரோர்க்குப் பார்க்கின்ற நேரத்தில், தன்விழியின் நேரிலுள்ள மாந்தளிரை, ஆர அருந்தத் தொடங்கும் அவாவோடு. 15. பெரு திரு. 7, 8