பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பாவேந்தரின் பாட்டுத்திறன்

நீலவண்ணனாகிய கடலரசன் நிலவின் ஒளியினால் பொன்வண்ணனாகின்றான். இவ்விடத்தில் “திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன்’ என்ற பேயாழ்வாரின் பாசுரம் நினைவிற்கு வருகின்றது. திருவின் ஒளியால் திரிவிக்கிரமனின் நீலநிற மேனி பொன்னிறமாகின்றது!

உறங்கா இரவு உறங்குவதற்காக இயற்கையில் ஏற்பட்ட இரவையும் பகலாக்கி அதில் தொழில் புரிகின்றனர். அந்த இரவை,

உலகத்தின் சுழற்சியினால் பரிதிக் கோளம்

ஒளிமாற்றி எழுவண்ணம் முகிலில் பூகம் பலகற்றும் அறிவில்லா மனத்தி னைப்போல் பரவும் இருள்; பழிபட்ட சிற்றுார் தன்னை நலமுற்றச் செய்திடுவோம் எனத்து னிந்த

நல்லிளைஞர் போல்விண்மீன்! எங்கும் மின்னும்! விலகட்டும் அறியாமை என்முன் நிற்கும்

பெரியராய் வெண்ணிலவு விரிவான் தோன்றும்.

வான்பறவை இனமெல்லாம் மரங்கள் தோறும்

மயக்குறுதல் மக்களைப்போல் குரல்அ டங்கும் தேன்பறவை சிற்சிலதம் குரல்அமிழ்தைத்

தித்திக்க எங்கிருந்தோ முணுமுணுக்கும் ஆனிரையும் ஆடுகளும் ஆன்ற வர்போல்

அடங்கும்;அலை ஆழியோ முரசொ லிக்கும்! :னன்.உறங்கும், உயிர் உறங்கா துணர்வில் ஓங்க, ஒளியுலகை வரவேற்க விழித்தி ருக்கும்’

என்ற இாண்டு அழகான எண்சீர் விருத்தப்பாக்களால் வருணிப்பர்.

குற்றால மலையருவி: குற்றால மலையருவியை,

தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்

2. ஆன்

றாம் திருவந்தாதி - 1 22. குயில் பாடல்கள் பக்கம் 71