பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத்திறன் 147 செங்கதிரோன் பரிக்காலும்

தேர்க்காலும் வழுக்கும்’ என்று வருணித்திடுவர் திரிகூடராசப்பக்கவிராயர்.இந்த அருவியைப் பாவேந்தர் இவ்வாறு வருணிப்பர்:

வான்கீழ் வெளியே அழகால் மறைத்த திருக்குற் றால மலைநீர் அருவி ‘இதோ.பார்’ என்றனர், எதிர்நின்று நோக்கினேன்; பொன்வெயில் தழுவிய தன்மே ணியுடன் நின்றி ருந்தாள் நெடியோள் ஒருத்தி, அன்னவள் மென்குழல் அணிமலர்ச்சோலையாய் விண்ணிடை விரைந்து நறுமணம் விரிக்கும் ஆட வில்லை, அசைந்திலள், விடாது பாடிக் கொண்டே இருந்தாள் பண்னொன்று: “தமிழ்வாழ்ந்தால்தான் தமிழர் வாழ்வார் சாதிநோய் தவிர்க தமிழனே, என்றும் தமிழ்மீண் டால்தான் தமிழ்நாடு மீளும்” என்ற முழக்கம் எழுச்சியைச் செய்ததால் தூய்தமிழ் மக்கள் தொடர்ந்தனர்; சூழ்ந்தனர்: சுடர்ப்படு முதியோள் தோளி னின்றும் அடிமிசை வீழ்ந்து புரளும் சலசலப் பொன்னா டைதனில் ஆடினர் “அன்னாய் அகம்புறம் குளிர்ந்தோம்!” என்றே: “பொதிய மலை’ எனப்படும் திருக்குற்றால மலையில் தமிழ் வாழ்வதால் தமிழ்பற்றியும் தமிழ்நாடு பற்றியும் குரல் எழுப்புகின்றார். தமிழ்தானே அவரது பேச்சும் மூச்சும்?

இன்தமிழ்நாடு: தமிழ்நாட்டின் வருணனை இது:

பொன்னினக் கதிர்விளை நன்செய் வளத்தின் தேன்மலர் சோலையும் தென்னையும் வாழையும் வானிடை உயரும் மங்காச் சிறப்பினை! கனியென்று கட்டிக் கரும்பென்று வையத் 23. திருக்குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளங் கூறுதல் (3) 24. குயில் பாடல்கள் - பக்கம் 12

1