உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பாவேந்தரின் பாட்டுத்திறன்

தனியென்று செந்நெல் தருவதோர் வளத்தினை! குன்றாப் பயன்தரு குன்றுகள் உடையைநீ!

இன்பமெனும் புதுப்புனல் ஆறுபாய் எழிலினை! காடுகள் கழனிகள் ஓடைகள் புள்ளினம் பாடும் பொய்கை பலப்பல உடையைநீ! மின்துங்கு மணிகள் மேவினை மாற்றுயர் பொன்துங்கு நிலவறை பொன்றாத் திருவினை! உலகினை அழைக்கும் ஒளிமுத்துக் கடல்கள் இலகு பவழ இலக்குகள் உடையைநீ! இப்பார் எல்லாம் ஏந்துகை நிரப்பும் உப்பளச் செல்வம் உதவும் திறத்தினை! உழுவார் மனப்படி மழைபெறும் பேற்றினை! ஒழியா தசையும் தென்றல் உடையைநீ’ தமிழகக் காட்சியை ஒரு தொலைக்காட்சிப் படம்போல் கண்டு மகிழ்கின்றோம்.

ஏழையின் குடிசை இரக்கமே வடிவெடுத்தாற் போன்ற நம் கவிஞர் பெருமான் ஏழையின் குடிசையையும் வருணிக்கத் தவறவில்லை.

பானையிலே நற்சிலந்திக் கூடு பழஅடுப்பில் பூனையின் துக்கம், பொலிஎருமை மாட்டின் முதுகெலும்பு போலும் முருங்கைக்காய் காய்க்கும். அதுவும் தலைமொட்டை அன்னை கிழவி

மணைக்கட்டை மேல்தனது மண்டை உறுத்தக் கணுக்கால் வயிறெட்டக் கட்டிச் சுருட்டிப் படுத்த படுக்கை, பசிக்கோ குடல்தான்! கடித்துண்ணத் தக்க கறியுணவு, பச்சை மயிலடியைப் போன்ற இளைநொச்சி மண்டும் அயலிடத்தில் நின்றபடி அம்மே எனக்கதறும் வற்றல் பசுமாட்டின் வாய்க்கதறல் காற்றசைவைச்

25. வேங்கையே எழுக! - பக்கம் 64