பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத்திறன் 149

சற்றும் பொறுக்காமல், தள்ளாடும் மேற்கூரை ஆன இவையும் அடுக்காய் அமைந்ததுதான் கூனக் கிழவர் குனிந்து புகும்குடிசை” வறுமையின் உச்சநிலை ஈண்டுக் காட்டப் பெறுகின்றது.

பனை: பனை, தென்னை, வாழை ஆகிய மூன்றின் எல்லாப்பகுதிகளும் மக்களுக்கு உதவுகின்றன. பனையைப் பற்றி நான்கு இன்னிசை வெண்பாக்களால் அழகாக வருணிப்பார்.

முதலை முதுகின் அடிமரமும் அன்பு மதலை தலைக்குலையும், மற்றக் குதலை தனைஒப்பச் சாறும், தமிழ்ஏடும் நல்கும் பனைஒப்ப துண்டோ பகர். (மதலை குழந்தை குதலை - மழலைச் சொல்)

பசுமை தடவி, மெருகிப் பலவாம் விசிறிகள் விற்பான்போல் நின்றே இசைபாடும் அப்பனையைக் கற்பனையாம் கற்பகமாம் என்றால் ஒப்பனைக்கொள்ளாதில் வுலகு. (மெருகி மெருகிட்டு; ஒப்பனை கொள்ளாது - ஒப்புக் கொள்ளாது)

காலாணி என்வாரை! கட்டுவதும் எந்நாரே மேலாடல் என்ஒலை வீடுகளும் மேலும் உண்ணும் துங்கு, கருப்பட்டி, நூல்தான், பதனி,பனாட் டெங்கும்என் சொத்தென்னும் பனை (பனாட்டு - பனம்பழத் தித்திப்பு)

அகணிசேர் மட்டை பன்னாடை விரல்போல் மிகவாம் பனம்பூ, விளைத்த தொகுகாய்கள் உள்நாடிக் கண்டேன் உரிஞ்சிதழ்த்தேன் மங்கையரின் கண்ணாடிக் கன்னம்நிகர் துங்கு.”

(அகணி - பனை மட்டையின் உட்புற நார்)

26. குயில் பாடல்கள் பக்கம் 46 27. குயில் பாடல்கள் - பக்கம் 59