பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத் திறன் . 151 “அருமையான மகனே, அந்த நாளில் - நீ பிறப்பதற்கு முன்னர் - நானும் நின்தந்தையும் பூவும் மணமும் போல-சொல்லும் பொருளுமாக . உடம்பும் உயிரும் என்ன - கரும்பும் அதில் பொருந்தும் சுவையுமாக எள்ளும் அதனுள் இருக்கும் எண்ணெயும் என்று சொல்லும்படிப் பிரியா இயல்பு கொண்டு வாழ்ந்தோம். பூவும் மணமும் போல் இருந்த எங்களைப் பிரிக்க வண்டாகவும் சொல்லும் பொருளுமாக வாழ்ந்த எங்களை வேறுபடுத்தப் புலவனாகவும்; உடலும் உயிருமாக ஒன்றியிருந்த எங்களைப் பிரிக்கும் யமனாகவும்; கரும்பும் சுவையுமாக இருந்த எங்களைப் பிரிக்கும் ஆலையாகவும், எள்ளும் அதனுள் இருக்கும் எண்ணெயும் என்று சொல்லும்படியாக இருந்த எங்களை அவற்றைப் பிரித்தெடுக்கும் செக்காகவும் நீ வந்து தோன்றினாய்” என்கின்றாள் பிள்ளைப் பேறு அடைந்த பெண்ணொருத்தி.

இத்துறையை யொத்த பாவேந்தரின் பாடல் ஒன்று:

பாலைப் பருகும் மடியிற் குழந்தை சேலைப் போல்விழி திறந்துதன் தாயை நோக்கிச் சிரித்தது! கண்ட அன்னை “உன்னால் அல்லவா உன்றன் தந்தை இரவில் என்னை அணுகா திருந்தான்?” எந்த நேரமும் எனைப்பிரி யாதவன் ஐந்தாறு திங்கள் அகன்றனன்! யாரால்? காதல் வாழ்வைக் கத்திகொண் டறுத்தாய் நோதல் வாழ்வை முன்னின்று நடத்தி என்று முனிந்தே இருகை யாலும் கீழடிப் பாள்போல் மேலே தூக்கிஎன் போராய்க் குவிந்த பொன்னே வாராய் என்று மார்பனைத் தனளே” என்பது, படித்து மகிழ்க. முன்னதனோடு ஒப்பிட்டுக் களிக்க (2) ஏக்கத்திற்கு மருந்து: ஆலமரத்தடியில் அமைந்திருந்த திண்ணையொன்றில் நண்பன் வருகையினை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தான். நண்பன் வரவில்லை; நங்கையொருத்தி

29. காதல் பாடல்கள்- பக்கம் 45