பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத் திறன் V 153 தங்குநீர் வெள்ளம் -

தழுவி மலர்மேனி ஆழம் அழைக்க

அவள்மூழ்கி னாள்.அந்த ஆழப் புனலும்தான்

ஆனேனா? இல்லையே!

தாழ உடைஉடுத்துத்

தண்ணிர் குடம்தாங்கி வந்தாள், வரும்வழியில்

வந்துநான் காத்திருந்தே செந்தாழை பூத்துச்

சிரிக்கச், சிரிப்பொலியாய்ப் பொற்பொடியை உண்டள்ளிப்

பூவை வழிமறைக்க நற்கையால் தான்துடைத்தாள்

நான்நிற் பதைக்கண்டான் கோத்தெடுத்த கோவைப் பழஉதடு தான்திறந்தே முத்தெடுத்து நான்மகிழ

முன்வைத்தாள் அன்பின் இருப்பெல்லாம் நீஆள்க என்றாள்! அவளின் சிரிப்பதற்குக் குத்தகைச்

இட்டு:

(சிரிப்பு+அதற்கு எனப் பிரிக்க) (3) மங்கையின் நெஞ்சம் உருகாத மனத்திற்கு இரும்புக்கும் கல்லுக்கும் உவமை கூறுவது கவிஞர் மரபு. “கல்நெஞ்சன்” என்ற தொடர் உலகவழக்கிலும் வழங்குகின்றது. மணிவாசகப் பெருமான் தம்மை இருப்பு நெஞ்ச வஞ்சனேன்” (திருவா. 84) என்று சொல்லிக் கொள்ளுகின்றார். பிறிதோர் இடத்தில் “இரும்புதரு மனத்தேனை”

30. காதல் பாடல்கள் - பக்கம் 45-46