பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத் திறன் Y 155 சொத்தினும் சீரினள், சோட்டுப்

புறாக்கூட்டு மார்பகத்தாள்; வித்தினும் மாணிக்க மேமிகும்

பொன்வயல் மேனியினை நத்தினும் ஏற்காத நெஞ்சினாள்;

என்ன நவிலுவதே?

வேயினும் பொன்னெடுந் தோளுடை

யாள்;ஒரு வேளையிலே தேயினும் தேயா முழுநிலாப்

போன்ற திருமுகத்தாள்; ஆயினும் ஆய்ந்தாய்ந்தியற்றிய

பாவை'என் விண்ணப்பமே ஈயினும் ஏற்காத நெஞ்சினாள்!

என்ன இயம்புவதே?

கரும்பினும் தித்திக்கும் சொல்லொன்று

சொல்லிஎன் காதலினை விரும்பினும் அன்றி விரும்பா

விடினும் விளக்காவிட்டால் துரும்பினும் துப்பிழந்தேன்வாழு

வேன்.அன்றிச் செத்தொழிவேன் இருப்பினும் பொல்லாத நெஞ்சினாள்!

என்ன இயம்புவதே?

இங்ஙனம் இருவேறு நிலைகளில் காணும் காட்சிகளைக் கவிஞர் வருணிப்பதைக் கண்டு அநுபவித்து மகிழ்கின்றோம். கவிஞர் நேரில் கண்ட காட்சிகள் அவர்தம் பாடல்களைப் படிக்குங்கால் அவை நம் மனத்திரையில் அமைந்து நம்மை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கச் செய்கின்றன.