பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் Y 157

அவர் மேலும் கூறுவது: “செலுத்தப்பெறும் புலன்களுக்கேற்ப, படிமம் வகைப்படுத்தப் பெறுகின்றது. ஆகவே, நாம் பெறுவன கட்புலப் படிமங்கள் (Visual images) இவற்றில்வண்ணப்படிமங்களும் வடிவப் படிமங்களும் அடங்கும், செவிப்புலப் படிமங்கள் (Auditory images), கவைப்புலப் படிமங்கள் (Gustatory images), நாற்றப்புலப் படிமங்கள் (Olfactory images), ஊறு அல்லது தொடுபுலப் (நொப்புலப்) படிமங்கள் (Tactual images) ஆகியவை. இவற்றைத் தவிர இயக்க நிலைப் படிமங்கள் (Kinesthetic images), மரபுநிலைப் படிமங்கள் (Conventional images) 5rsirusm6uuq o sirsrsuro. 3lsos, தனியாகவும், ஒன்று இரண்டு பலவுமாக இணைந்தும் கலவைப் படிமங்களாகக் கவிதையில் அமைகின்றன. மேலும் குறியீடுகளாக அமையும் சொற்கள் கட்டுண்ட படிமங்களையும் (Tied images). விடுதலைப் படிமங்களையும் (Free images) உண்டாக்கிப் படிப்போரிடையே ஒத்துணர்வுத் துலங்கலையும் (Sympathetic response), gt"t- 9-5UUT(gth gil6Ut!66n6ouq (Empathetic response) எழுப்புகின்றன. இவற்றால் பாட்டநுபவம் - முருகுணர்ச்சி - கொடுமுடியை எட்டுகின்றது. இந்தக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பாவேந்தரின் பாடல்களை ஆராயலாம். அப்பெருமகனாரின் நோக்கு அவர்தம் கவிதைகளில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் காணலாம்.

கட்புலப் படிமங்கள்: பல்வேறு படிமங்களிடையேயும் கட்புலத்தைக் கவரும் படிமங்களே அதிகமாக உள்ளன. இவையே படிப்போரின் மனத்தில் நிலையான பதிவினை உண்டாக்கி விடுகின்றன. கட்புல நரம்பு ஏனைய புல நரம்புகளை விடத் தடித்திருப்பதே இதற்குக் காரணம் எனக் கருதலாம். இதன் காரணமாகவே இக் காலக் கல்வியில் கட்புலச் செவிப்புலத்துணைக் 3(550356r (Audio-Visual Aids) golstegunres uusiru@igi பெறுகின்றன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சுற்றுலா அமைத்து மாணாக்கர்களைப் பல்வேறு இடங்களுக்கு இட்டுச் சென்று பல்வேறு

3. Burton, N: The Criticism of Poetry (Longmans and Green & Co. Ltd.,

London) - Page 99