பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பாவேந்தரின் பாட்டுத்திறன் காட்சிகளை நேரில் கானச் செய்கின்றனர். பாவேந்தர் பாடல்களில் கட்புலனைக் கவரும் ஒரு சில படிமங்களைக் கண்டு மகிழலாம்.

உதாரன் விண்ணில் தோன்றும் முழுமதியினை நோக்கி இவ்வாறு பாடுகின்றான்:

நீலலான் ஆடைக்குள் உடல்ம றைத்து

நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை! கோலமுழுதும்காட்டி விட்டால் காதல்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ? நீதான்!

சொக்கவெள்ளிப்பாற்குடமோ? அமுத ஊற்றோ? காலைவந்த செம்பருதி கடலில் மூழ்கிக்

கணல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ?”

அழகிய நங்கை யொருத்தி தன் உடல் முழுவதையும் நீலவான் ஆடைக்குள் மறைத்துக்கொண்டு முகத்தை மட்டிலும் காட்டுகின்றாளாம். அதுவே நிலாவாம். இது கட்புலப் படிவம். இந்தப் பாடலில் இதனைத்தவிர, வானச் சோலையிலே பூத்த தனிப்பூ, சொக்க வெள்ளிப் பாற்குடம், காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்பு போல ஏனைய கட்புலப் படிமங்களும் ஒருங்கிணைந்து ஒர் அற்புதக் கலவைக் காட்சியினை நம் மனத்தகத்தில் தோற்றுவித்து அதனைப் பூரிப்பு அடையச் செய்கின்றது. இன்னும் இதே கவிதையில்,

பழகும் இருட்டினில் நானிருந்தேன் - எதிர்

பால்நில வாயிரம்போல் - அவன் அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்

அடியேன் செய்த தொன்று மில்லை’

என்னும் பகுதியிலும் கட்புலப் படிமத்தைக் கண்டு அநுபவிக்கலாம்.

மேலும், அடுத்து வரும் பாடற் பகுதிகளில் உள்ள படிமங்களையும் அநுபவித்து மகிழலாம்.

4. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி (3 புரட்சிக் கவி) 5. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி (3 புரட்சிக் கவி)