பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பாவேந்தரின் பாட்டுத்திறன்

செவிப்புலப் படிமங்கள்: காதினால் மட்டிலும் கேட்டு உள்ளத்தைப் பறிகொடுக்கச் செய்யும் படிமங்கள் இவை. பாவேந்தரின் பாடல்களில் இத்தகைய படிமங்களைக் காணலாம். பாவேந்தரின் முருகியல் நோக்கு செவிப்புலப் படிமங்களைப் படைப்பதிலும் செல்லுவதைக் கண்டு களிக்கலாம்.

கேளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம் ண்ேடுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு துளிபடத் தாவுகையில் ஒனளையிடும் குள்ளநரி குன்றில் - புகும் ஒன்றி!” என்னும் பாடற்பகுதியில் நரி ஊளையிடும் ஒலி நம் மனக்காதில் கேட்கின்றது.

அகப்பொருள் இலக்கணத்தில் காதலன்- காதலி சந்திக்கும் இடத்தைக் “குறியிடம்” என்று வழங்குவர். பூங்கோதை (எதிர்பாராத முத்தம்) இற்செறிப்பில் இருக்கும் காலத்தில் பொன்முடியும் பூங்கோதையும் இரவில் சந்திப்பதாகக் குறியிடம் அமைத்துக் கொள்ளுகின்றனர். நள்ளிரவில் பூங்கோதை வீட்டின் தோட்டத்தில் புகுகின்றான் பொன்முடி. அத்தருணத்தில் காதலன்தான் வருகின்றான் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றாள் பூங்கோதை, பலகணியின் அருகிலிருந்து,

வீணையிலோர் தந்தி

மெதுவாய் அதிர்ந்ததுபோல் ஆணழகன் என்றெண்ணி

“அத்தான்”என்றாள்.நங்கை” வீணையின் தந்தி அதிர்வினால் கேட்கப் பெறும் “த்தான்” என்னும் இனிய ஒலிபோலவே மெதுவாய்க்கூப்பிடும் பூங்கோதையின் “அத்தான் என்னும் ஒலியும் அமைகின்றது. “அத்தான்” என்னும் சொல்லில் செவிப்புலப் படிமம் அமைந்து வீணையின்தந்தி ஒலியையும்

15. பாதா, கவிதைகள் முதல் தொகுதி-7 காடு. பக்கம் 37 16. எதிர்பாராத முத்தம் - நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு - பக்கம் 18