பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பாவேந்தரின் பாட்டுத்தின் “கினையினிற் பாம்பு தொங்க

விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை

வெடுக்கெனக் குதித்த தைப்போல கிளைதொறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம் ஒளிப் பாம்பாய் எண்ணி எண்ணி

உச்சிப்போய்த் தன்வால் பார்க்கும்” இப்பாடற் பகுதியில் குரங்கின் இயக்கத்தைக் காட்டுபவர், விளக்கினைத் தொட்ட பிள்ளையின் வெடுக்கென இயங்கும்’ கையின் இயக்கத்தையும் பெற வைக்கின்றார். நாம் இங்கு இரண்டு இயக்கப்புலப் படிமங்களைக் காண்கின்றோம்; அதுபவிக்கின்றோம்.

33

“அகன்றவாய்ச் சட்டி ஒன்றின்

விளிம்பினில் அடிபொருத்தப் புகும்தலை, நீர்வாய் மொண்டு

திமிர்ந்திடும் பொன்இமைகள் தகும்,மணி விழிதற் பாங்கும்

தாட்டிடும்; கீழ்இறங்கி மகிழ்ச்சியாய் உலவி வைய

மன்னர்க்கு தடைகற்பிக்கும்” புறாக்களின் செயல்களைக் காட்டும் இப்பாடற் பகுதியில் சட்டியில் நீர் பருகும் அதன் போக்கு தலையை அசைத்து அதன் நாற்புறமும் செலுத்தப்பெறும் அதன் பார்வை, சட்டியை விட்டுக் கீழிறங்கி இராச நடை’ போடும் அதன் அழகு காட்டும் போக்கில் பல்வேறு இயக்கப்புலப் படிமங்களில் நம் மனம் ஈடுபட்டு மகிழ்கின்றது. இங்ஙனமே புறாவின் தாயன்பு - தந்தையன்பு காட்டும்,

38. அழகின் சிரிப்பு ஆல்- பக்கம் 36 39. அழகின் சிரிப்பு- புறாக்கள் பக்கம் 39