பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பாவேந்தரின் பாட்டுத்திறன்

“எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்

எதிலும் அசைவைச் சேர்த்தாய்” கொல்லாமல் இசையால் இன்பம் - எமையே!

துய்க்கச் செய்தாய்! அடடா! கல்லா மயில்வான் கோழி - புறவுகள் காட்டும் சுவைசேர் அசைவால் அல்லல் விளக்கும் “ஆடற் கலை"தான்

அமையச் செய்தாய் வாழி!” என்னும் பாடலில் காட்டுகின்றார் கவிஞர்.

கலவை நிலைப் படிமங்கள்: சில பாடல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படிமங்கள் அமைந்து பொலிவூட்டி முருகுணர்ச்சியை மிகுவிக்கின்றன.

“புறப்பட்ட மங்கைதான் பூங்கொடி என்பவள் நிறப்பட் டாடை நெகிழ்ந்தது காற்றில்! பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம் சீதளஞ் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!” பூங்கொடியின் வருகையைச் சித்திரிக்கும் இவ்வடிகளில் நிறப்பட்டாடையிலும், நிலா முகத்திலும், செவ்விதழ் மின்னுவதிலும் கட்புலப் படிமங்களும்; பட்டாடையின் நெகிழ்ச்சியில் இயக்கப்புலப் படிமமும், சிலம்பு பாடுவதில் செவிப்புலப் படிமமும், முகம் சீதளஞ் சிந்துவதில் தொடுபுலப் படிமமும் அமைந்து பூங்கொடியின் அழகிற்குப் பொலிவூட்டுவதைக் கண்டு மகிழலாம்.

“அழகு” என்பவளின் இருப்பிடத்தைக் காட்டும் கவிதை இது:

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கிற் சிரிக்கின்றாள்; நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்

நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே! செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்

43. பாதா.க. இரண்டாம் தொகுதி - 4. இயற்கைச் செல்வம்- பக்கம் 33-34 44. எதிர்பாராத முத்தம் பக்கம் 5