பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் 171

நிறத்தினிலே என்விழியை நிறுத்தி னாள்;ளன்

நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!” கட்புலப் படிமங்களும் (சிறு குழந்தை விழி, திருவிளக்கு நன்செய் நிறம்), இயக்கப்புலப் படிமங்களும் (மலர் தொடுப்பாளின் விரல் வளைவின் அசைவு, உழவனின் புதுநடை, இதில் அமைந்து இருப்பதைக் காணலாம்.இந்தப் படிமங்கள் கவிஞன் உள்ளத்தில் இடம் பெற்றதுபோல், படிமங்கள் அமைந்த பாடலும் நம் உள்ளத்தில் நிலையான இடம் பெற்று விடுகின்றது.

அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்னகத்தில் கொண்ட ஒரு பெரும் புறத்தில் கூத்தாடுகின்றது காற்று. அது தென்றலாய் உருவெடுப்பதை அடியிற் காணும் பாடற்பகுதியில் காணலாம்.

பொதிகைமலை விட்டெழுந்து சந்தனத்தின்

புதுமணத்தில் தோய்ந்து,பூந் தாது வாரி ததிதழுவி அருவியின்தோள் உந்தித் தெற்கு நன்முத்துக் கடலலையின் உச்சி தோறும் சதிராடி, மூங்கிலிலே பண்ள ழுப்பித்

தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து

முதிர்ந்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி

அந்தியிலே இளம்முல்லைசிலிர்க்கச் செந்நெல்

அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன் சிந்தைஉடல் அணு ஒவ்வொன்றும்சி லிர்க்கச்

செல்வம்ஒன்று வரும்,அதன்பேர் தென்றல் காற்று” இப்பாடற் பகுதிகளில் நாற்றப்புலப் படிமம், தொடுபுலப் படிமம், இயக்கப்புலப் படிமம், செவிப்புலப்படிமம், சுவைப்புலப்படிமம் ஆகியவை அமைந்துள்ள நேர்த்தி எண்ணிஎண்ணி மகிழத்தக்கது. கவிதையை ஒர் அழகிய அணங்காகக் கற்பனை செய்யும் பாடல்களில் இஃது ஒன்று.

45. அழகின் சிரிப்பு - அழகு - 2. (பக்கம் ) 45. பாதா.க. இரண்டாம் தொகுதி - 9. தென்றல் பக்கம் 42