பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் 173

கிளிமகள், அணையாத காதல், சதிராடு தேவடியாள்போல், பாதச் சிலம்பு பாடிற்று. இதழ் நிலத்தில் கன உதட்டை ஊன்றி விதைத்தான் முத்தம், துயரில் அழுந்திக் கரையேறி, கள்ளியும் பாளையோல் கண்ணிர்விட்டு, மாவின் வடுப்போன்ற விழி, தென்னாட்டு அன்னம் (பெண்), வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத்தேன், கனிஇதழ் நெடிதுறிஞ்சி, கனியிதழைக் காதல் மருந்தென்று தின்றான். தேனைச் சொட்டுகின்ற இதழாள், மலைநிகர் மார்பில், அலைநிகர் கண்ணிர் அருவிபோல் இழிந்தது, என்னுளம் அவனுளம் இரண்டும் பின்னின, நானும் அவனும் தேனின் சுவையானோம், காலை மலரக் கவிதை மலர்ந்தது, தையற் சடுகுடு பொறி, தழல்நிற மாம்பழத்தில் தமிழ்நிகர் சுவையைக் கண்டான், உள்ளத்தில் கவிதை வைத்தே உயிரினால் எழுப்பினாள், கிளிப் பேச்சுக்காரி, பண்டிதர்கள் பழங்கதையின் ஒட்டைக்கெலாம் பணிக்கை இடம்போல், மணிவிளக்கும் நடுங்காமல் சன்னலுக்குள் புகுந்த தென்றல், பலாப்பழம்போல் வயிறு, வீறார்ப்பு வாழ்வு, மாணிக்க மாம்பழந்தான் மரகதத்தின் இலைக்காம்பில் ஊசலாட கற்பாரின் நிலையேயன்றிக் கற்பிப்பார் நிலையும் உற்றாள், விரிவாழைப் பூவின் கொப்பூழ், கன்னற் பிழிவே கணிச்சாறே கண்ணுறங்கு, சேவல் கூவிற்று, வானம் சிரித்தது -

இந்தச் சொற்றொடர்களில் பொதிந்திருக்கும் பல்வேறு வகைப் படிமங்கள் மெல்லிய பிளாஸ்டிக் உறையில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு நிற வடிவ மிளகு மிட்டாய்போல் சுவைப்போர் உள்ளத்தைக் கவர்வதுபோல் படிப்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன.