பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பாவேந்தரின் பாட்டுத்திறன்

பாவேந்தர். ஒரிடத்தில் விண்மீன்கள் நீந்தும் வானத்தைப்பலாப் பழமும் அதன் சுவைகளும் என வருணித்தார். அதே இரவு வானம் இப்போது உள்ள வெப்பத்தால் கொப்பளித்த உடம்பாகத் தெரிகின்றது. இங்குத் தம் வெறுப்பில் எழுந்த துயரத்தை இவ்வாறு வெளியிடுகின்றார்.

அந்திவான் செக்கர் அழகு,

கிழக்குப்பெண் விட்டெறிந்த கிளிச்சிறைப் பரிதிப் பந்து செழித்தமேற் றிசைவானத்தின்

செம்பருத் திப்பூங் காவில் விழுந்தது! விரிவிளக்கின்

கொழுந்தினால் மங்கை மார்கள் இழந்ததைத் தேடிக் கொள்ள

இருள்மாற்றிக் கொடுக்கின்றார்கள்’ என்ற பாடலாக வடிவெடுக்கின்றது. கவிஞரின் அகக்கண் விரிந்த வானத்தை வியந்து நோக்குகின்றது. அதன் விரிவையும் தம் சிறுமையையும் ஒப்பிட்டுப்பார்க்கின்றார்."வானம் எவ்வளவு பெரியது! அதனுடன் நின்னை ஒப்பிட்டு நோக்குக. இப்பூவுலகம் ஒரு கொய்யாப் பிஞ்சு என்றால் நீ அதில் ஊரும் ஒரு சிற்றெறும்பு. மக்கள் அனைவரும் அப்படியே உள்ளனர். நிலைமை அப்படியிருக்க, “நான்மேல், நீ கீழ்” என்று பேசுவதெல்லாம் பித்தேறியவர் பேசும் பேச்சன்றோ !” என்று சமத்துவ நோக்கினை வான் தந்த பாடமாக வடித்துத் தருகின்றார் கவிஞர்.

பிறிதொரு பாடலில் வானத்தில் காணப்பெறும் விண்மீனைக் காட்டுவார்.

மின்னாத வானில்

மின்னுகின்ற மீன்கள் சின்ன சின்ன வயிரம்

தெளிவு முத்துக்கள்

5. அழகின் சிரிப்பு- பக்கம் 31