பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பாவேந்தரின் பாட்டுத்திறன் என்று காட்டுவான். புகர்முக யானையின் தோலை மேற்போர்த்துக் கொண்டிருக்கும் பரமசிவனைப்போல் மிகுந்த கரிய இருளிலே மறைந்து கிடக்கின்றது. உதயகிரி. அப்பரமசிவனின் நெற்றியில் சிறந்து விளங்கும் நெருப்புக்கண்போல உதயகிரியின் கொடுமுடியில் உதித்து விளங்குகின்றான் பகலவன்.

இந்தக் கதிரவன் விரைவில் விண்வெளிக்கு நகர்ந்து கதிர்களாகிய சடைகளை விரித்துக்கொண்டு நடனமாடுவதைக் கம்பநாடன்,

எண்ணரிய மறையினொடு

கின்னரர்கள் இசைபாட

உலகம் ஏத்த விண்ணவரும் முனிவர்களும்

வேதியரும் கரங்குவிப்ப வேலை என்னும் மண்ணுமணி முழவதிர

வான்.அரங்கில் தடம்புரிவான்

இரவி யான கண்ணுதல்வா னவன்கனகச்

சடைவிரிந்தால் எனவிரிந்த

கதிர்கள் எல்லாம்” என்ற பாடலாக நம் மனத்திரையில் எழுதியதையும் நினைக்கின்றோம். கவிஞரின் உருவகம் நம் மனத்தை உருக்கி விடுகின்றது. இவர் புனைந்து காட்டும் இருசுடர் தோற்றங்கள் எல்லாம் நம் மனத்தில் குமிழியிடுகின்றன.

மறையும் கதிரவனைப் பார்த்தன் பாஞ்சாலிக்குக் காட்டுவது போல் பாரதியார் நமக்குக் காட்டுவார்.

அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம்

அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய் இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி

எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,

11. பாலகாண்டம், மிதிலை - 153