பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 181 முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே

மொய்குழலாய் சுற்றுவதன் மொய்ம்பு காணாப்! வடிவான தொன்றாகத் தகடி ரண்டு

வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்டாம்” இங்கு பாரதியார் கணந்தோறும் கதிரவன் நவநவமாகப் புதிய வண்ணம் காட்டி நிற்பதைக் காளி பராசக்தி களிக்கும் கோலமாகக் காண்கின்றார். அம்பிகையின் திருநடனம் அம்பலவனின் கூத்தினையொத்துக் காணப்படுகின்றது. அவளும் வானாங்கில்தான் நடனம் புரிகின்றாள். அவள் திருக்கையில் பொன் மயமான வட்டத் தட்டொன்று சுழன்று கொண்டுள்ளது. பத்துக் கோடி மின்னல்களைத் திரட்டி அவற்றை ஒரு குகையில் (Crucible) போட்டு உருக்கி வார்த்து ஒரு வட்டமான தட்டாக ஆக்கி அதனைத் தனது திருக்காத்தில் தாங்கிக் கொண்டு சுழற்றுகின்றார் அன்னை பாாசக்தி. அன்னையின் அற்புதத் திருநடனத்தை மானசீகமாகக் கண்டுகளிக்கும் கவிஞர் நமக்கு அந்த அற்புத வட்டத் தட்டை மட்டிலும் காட்டுகின்றார். அவள் கையில் கரகரவென்று சுழன்று நிற்கும் வட்டத்தட்டே வானத்தில் கரகரவென்று சுழன்று மறையும் நிலையிலுள்ள வெய்யோன் என்பது கவிஞரின் அற்புதக் கற்பனை.

இந்தக் கதிரவனைப் பாவேந்தர்,

பொங்கியும் பொலிந்து நீண்ட

புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும் சிங்கமே! வான வீதி

திகுதிகு எனள ரிக்கும் மங்காத தணற்பிழம்பே!

மாணிக்கக் குன்றே! தீர்த்த தங்கத்தின் தட்டே! வானத்

தகளியிற் பெருவி ளக்கே!” என்று படம் பிடித்துக் காட்டுவார். கதிரையும் இருளையும் தங்க இழையுடன் நூலை வைத்துப் பின்னிய ஆடையாகக் காண்கின்றார்.

12. பாஞ்சாலி சபதம் - 150 13. அழகின் சிரிப்பு - பக்கம் 27