பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை-Y-183 தேவர்கட்காகத் திருமால் அமுதம் பெறச் செய்த ஏற்பாட்டை நமக்கு முதலில் நினைவுறுத்துகின்றான். இறவாத நிலையைப் பெறுவான் வேண்டி தேவர்கள் அமுதம் பெற எண்ணுகின்றனர். “மந்தர மலையை மத்தாகவும், “வாசுகி என்னும் மாதாகத்தைக் கடையும் கயிறாகவும் கொண்டு திருப்பாற் கடலைக் கடையும் திட்டம் நிறைவேற்றப்படுகின்றது. அமுதம் நிறைந்த பொற்கலசம் ஒன்று பாற்கடலின் அலைகளிடையே தோன்றி ஆடி அசைந்து வருகின்றது. அந்தப் பொற்கலசத்தையொப்பச் சந்திரன் கருங்கடலில் உதயமாகின்றான்.

பாவேந்தரும் முழுமதியத்தின் பேரழகில் ஈடுபடுகின்றார். காதல் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் உதாரன் என்ற காதலன் வாயில் வைத்துப் பேசுகின்றார்.

நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து

திலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தைக் கோலமுழுதும் காட்டிவிட்டால் காதல்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!

சொக்கவெள்ளிப்பாற்குடமோ? அமுத ஊற்றோ? காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்

கணல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ” இங்கு கவிஞர் வான்மதியை ஒரு பெண்ணாக உருவகிக்கின்றார். அந்தப் பெண் நீல ஆடை புனைந்து உடலையெல்லாம் மறைத்துக்கொண்டு முகத்தை மட்டிலும் வெளிக்காட்டுகின்றாள். அவளுட்ைய முழு அழகையும் காட்டிவிட்டால் அவள் காதல் வெள்ளத்தில் உலகம் இறந்து படுமோ என்று வினவுகின்றான். சந்திரா, நீ வானச் சோ-பில் ~ளிப் பூவோ ? பாலமுதம் நிறைந்த சொக்க ெ ஊற்றோ? காலையின் கனன்று எழுந்த மூழ்கி, வெப்பத்தை இழந்து தண்ணெ

16. பா.தா.க. முதல் தொகுதி - புரட்சிக்கவி