பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பாவேந்தரின் பாட்டுத்திறன்

வடிவெடுத்ததோ ?” என்று நேருக்கு நேர் பேசுவது நம்மைக் கிளர்ந்தெழச் செய்கின்றது. பிள்ளைத்தமிழ்க் கவிஞர்கள் “அம்புலிப் பருவத்தில் அமைத்துக் காட்டும் கற்பனையெல்லாம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தைக் காட்டி நிற்பதாகும்.

நிலாவைப்பற்றி பகுத்தறிவு நினைவுடன் பாடிய பாடல் இது:

முழுமை திலா! அழகுநிலா! முளைத்தது விண்மேலே - அது பழமையிலே புதுநினைவு பாய்ந்தெழுந்தாற் போலே! அழுதமுகம் சிரித்ததுபோல் அல்லி விரிந்தாற்போல் - மேல் கழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத் தொத்திக் கிடந்தாற் போல் நிலாவின் அழகு அனைத்தையும் அப்படியே சித்திரித்துக் காட்டுகின்றது. “இளைஞர் இலக்கியத்தில்’ குழந்தைகள் மனங்கவருமாறு இயற்றிய பல பாடல்களைக் கண்டு கற்று மகிழலாம்.” (4) காலைப் புனைவு: பொழுது புலரும் காலை நேரம் கவிஞர்களின் கருத்தில் அற்புதமாகப் படைக்கப் பெறுகின்றது. பாரதியாரின் குயில் பாட்டில் எழு ஞாயிற்றின் எழில் இன்னமுதம் விளைவிக்கின்றது.

தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதி கவர்ந்து சுடர்மயமாய் விந்தையினை ஒதில் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?

புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிதந்து விண்ணை வெளியாக்கி விந்தை செயும் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்

தொழுதேன்”

17. இளைஞர் இலக்கியம் - பக்கம் 27-35. 18. குயில் பாட்டு இருளும் ஒளியும் - அடி (31-43)