பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை Y 185 என்ற பாடற்பகுதியைப் படிப்போர் சிந்தையில் இன்னமுதம் சொட்டுவதை அறியலாம். விடியற் காலத்தைப் பாவேந்தர்,

விடிந்தது தங்க வெயில் வந்தது மடிந்தது காரிருள்! படித்தது பனிப்புகை: பசும்புல் கதிரொளி பட்டு விளங்கின! விசும்பிற்காக்கைகள் பொன்னென விளங்கின.” என்று காட்டுவார்! விடியலைப் பின்னும்,

தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலத்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது” என்று புனைந்து காட்டுவார்.

எழுந்தது பரிதிக் குழந்தை கடலின் செழுநிலத்தில் செம்பொன் துவி! கரிய கிழக்குவான் திரையில், வெளுப்பும் மஞ்சளும் செம்மணி வண்ணமும் ஒளி செயும்’ என்று காலை எழும் கதிரோனைக் குறிப்பிடுவார்.

தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான் செங்கதிற் செல்வன்!’ என்றும்,

அருவிமலை மரங்கள் அத்தனையும் பொன்னின் மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான்” என்றும்,

மன்னிய சீழ்க்கடல்மேல் பொன்னன் கதிர்ச்செல்வன் துன்னினான்’

என்றும்,

19. காதல் பாடல்கள் - பக்கம் 183 20. குடும்ப விளக்கு-பக்கம்5 21. குடும்ப விளக்கு மூன்றாம் பகுதி- பக்கம்124 22. பாதா.க. மூன்றாம் பகுதி. பக்கம் 172 23. பாதா.க. தொகுதி 3-பக்கம் 173 24. பாதா.க.- தொகுதி 3-பக்கம்162