பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 187 (6) வானவில்: சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் வானவில்லைப் பாவேந்தர் தீட்டும் சொல்லோவியம்:

புதுமை இது வானிடைக் கண்ட அல்லோவியம் போய்முகிற் புனலிலே தொடிதோறும் கரைந்ததே! இது.அது எனச்சொல்ல ஏலா தொழிந்ததே! இன்பமும் துன்பமும் யாவுமே இவ்வண்ணம் கதுமெனத் தோன்றிடும் மறைந்திடும் என்பதைக் கண்னெதிர்க் காட்டவரும் விண் எழுது கவிதையாம் அது நமக்குத் தெரியும் அன்றியும் கவிஞருளம் அவ்வான விரிவினும் பெரிதென்ப தறிவுமே!’ இதில் வானவில்லை வருணித்து மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் கதுமெனத் தோன்றிடும் என்பதைத் தற்குறிப்பாகச் சுட்டியுரைப்பதைக் காண்கின்றோம்.

வானவில்லைப்பற்றிய இன்னொரு பாடல்:

மண்ணுலகு கடல்மலை அனைத்துமுள்ளாக்கியே

வளைந்தது வானவில் என்னென்ன வண்ணங்கள் விண்முழுது கருமனல் அதன்மீது மாணிக்கம்

வீறிடு திறப்பச்சை வயிறதடுக்குகன் உண்ணிலவு நீரோடை கண்ணையும் மனத்தையும்

உயிரினொடும் அள்ளியே செல்கின்ற தல்லாமல் சுண்ணற்ற அழகினால், இயற்கைவிளை யாடலின்

எல்லைகாணேனதைச் சொல்லுமா றில்லையே!” இதுவும் வானவில்லை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது.

(7) இருள்: அறிவை விட அறியாமை பெரிது.அதுபோல ஒளியை விட இருள்தான் பெரியது.

“எங்குச்செல்கின்றாய்” என்று

பரிதியை ஒருநாள் கேட்டேன்;

29. குயில் பாடல்கள்- பக்கம் 13 30. பன்மணித்திரள்