பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பாவேந்தரின் பாட்டுத்திறன்

“கங்குலை ஒழிக்க” என்றான்.

“கடிதுசெல் தம்பி” என்றேன். அங்குன்னைத் தொடர்ந்தான், நீயோ

அகல்வதாய் நினைத்தான்; என்னே! எங்கணும் நிறைந்த நீர்நீ;

அதில்"கதிர்” சுழல்வண் டன்றோ!’ என்று சுவையுடன் “இருள்தான் அனைத்திலும் பெரிது” என்ற உண்மையை வெளியிடுகின்றார்.

‘கள்ளரை வெளிப்படுத்தும் இருட்பெண்ணின் திருமேனியின் அழகினை,

விண்முதல் மண்வ ரைக்கும்

வியக்கும்.உன் மேனி தன்னைக் கண்ணிலே காண்பேன்; நீயோ

அடிக்கடி உடையில் மாற்றம் பண்ணுவாய் இருளே, உன்றன்

பகல்உடை தங்கச் சேலை! வெண்பட்டில் இராச்சேலைமேல்

வேலைப்பா டென்ன சொல்வேன்!” என்று நமக்குக் காட்டி மகிழ்வார்.

அறிவென்றால் ஒளியாம், ஆம்ஆம் அறியாமை இருளாம், ஆம்ஆம் அறியாமை அறிவைச் செய்யும்;

அறியாமை அறிவால் உண்டோ?’ என்று வினவுவார். சிறுவனைத் தேள் கொட்டிய நிகழ்ச்சியால் “கட்டாயம் தூய்மை வேண்டும்” என்ற படிப்பினையை இருள் தந்தது என்று இருளின் பெருமையைச் சொல்லி மகிழ்கின்றார்.

(8) தென்றல் தென்றலை ‘அமிழ்து” என்பார் பாவேந்தர். அதனைத் தென்னாடு பெற்ற செல்வம்” என்றும் போற்றுவார். இது

31. அழகின் சிரிப்பு- பக்கம் 46 32. அழகின் சிரிப்பு - பக்கம் 46 33. அழகின் சிரிப்பு - பக்கம் 49