பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 189 தரும் இன்பத்தை தென்னாட்டுப் பகுதியினர் அல்லால் பிறர் எவரும் தென்றலின் சிறப்பை அறிவதற்கு வாய்ப்பில்லை. தென்னாட்டுக் கல்லால் வேறே

எந்நாட்டில் தெரியச் செய்தாய்? என்று தென்றலையே வினவுகின்றார். இதன் வரலாற்றைக் கவிஞர் புலப்படுத்துவதை நோக்குங்கள்.

பொதிகைமலை விட்டெழுந்து சந்த ணத்தின்

புதுமணத்தில் தோய்ந்து,பூந் தாது வாரி நதிதழுவி அருவியின்தோள் உந்தித் தெற்கு

நன்முத்துக் கடலலையின் உச்சி தோறும் சதிராடி, மூங்கிலிலே பண் ைழுப்பித்

தாழையெல்லாம் மடற்கத்தி சுழற்ற வைத்து முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி, அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச், செந்நெல்

அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன் சிந்தைஉடல் அணுஒவ்வொன்றும்சி லிர்க்கச்,

செல்வம்ஒன்று வரும்,அதன்பேர் தென்னற் காற்று’ கண்ணனாகிய சேவகனை “எங்கிருந்தோ வந்தான்” என்று சொல்வார் பாரதியார். எங்கும் எதிலும் ஊடுருவி நிற்கும் இறைவன் தோன்றின இடம் ஒன்று தனியே இருக்கமுடியாதல்லவா? ஆனால், பாவேந்தரோ தென்றல் தோன்றின இடத்தைப் “பொதிகை மலை” என்று சுட்டி உரைத்துவிடுகின்றார்.

இந்தத் தென்றல் சந்தனஞ்சார் பொதிகை மலையில் இருக்கும் போது குளிர்ச்சி அடைகின்றது; நறுமலரின் ஊடே தவழ்ந்து அவற்றின் நல்ல மணத்தினை நுகர்கின்றது; வண்டின் இன்னிசையை மாந்தி வளர்கின்றது. அன்னையின் அன்பினைக் கண்ணால் காண முடியாவிட்டாலும் அவளது அன்பு, உயிர்க் கூட்டத்தை இணைத் திடுவதுபோல் உருவமற்ற தென்றல் அதன் ஒவ்வொரு சின்ன

34. பாதா.க இரண்டாம் தொகுதி - பக்கம் 42