பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பாவேந்தரின் பாட்டுத்திறன் அசைவினாலும் நம் மேனியைச் சிலிர்த்திடச் செய்கின்றது. அது தும்பியின் கண்ணாடிச் சிறகில் மின்னியும், மலர்களின் இதழ்களில் நாட்டியம் ஆடியும், அவற்றினிடையே தேனைப்பிளிற்றியும், பிள்ளைகள் விளையாடும் பந்தினைத் தள்ளியும், கிளியின் சிறகுகளைப் பற்றியும் விளையாடும். அதன் விளையாட்டில் தம் உள்ளத்தைப் பறிகொடுக்கின்றார் கவிஞர்.

தென்றலின் திண்மையையும் நுண்மையையும் கூறும் கவியரசு,

அண்டங்கள் கோடி கோடி

அனைத்தையும் தன்னகத்தே கொண்டஒர் பெரும்பு றத்தில் கூத்திடு கின்ற காற்றே! திண்குன்றைத் தூள்து ளாகச்

செய்யினும் செய்வாய், நீஓர் துண்துளி அனிச்சப் பூவும்

நோகாது நுழைந்து செல்வாய்’ என்று போற்றி மகிழ்வார். அன்றியும்,

........ பெண்கள் விலக்காத உடையை நீபோய்

விலக்கினும், விலக்கார் உன்னை” என்று அனைவரும் போற்றும் செல்லக் குழந்தையாகவும் போற்றுவார். இந்த உவமையையும் தென்னம்பாளைச் சிரிப்புக் காரி” என்ற உருவகத்தையும் பேரறிஞர் அண்ணா 1940-களில் பல மேடைகளில் பேசித் தாமும் மகிழ்ந்ததையும் எம் போலியரை மகிழ்வித்ததையும் நேரில் அநுபவித்ததுண்டு. அந்தக் காலத்தில் அண்ணா பாவேந்தரைப் “புரட்சிக் கவிஞர்” என்றும், பாவேந்தர் அண்ணாவைப் “பேரறிஞர்” என்றும் பேசி வந்த பேச்சுகள் இன்றும் என் “மனக்காதில் ஒலித்துக் கொண்டுள்ளன.

தென்றலின் அசைவுகள் புரியும் செயல்களையும் அவை மருந்தாகிப் பயன் விளைவிப்பதையும்,

35. அழகின் சிரிப்பு- பக்கம் 6 36. அழகின் சிரிப்பு - பக்கம் 7