பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 191

இழந்திட்டால் உயிர்வாழாத

என்னாசை மலர்முகத்துக் குழந்தையின் நெற்றி மீது

குழலினை அசைப்பாய்; அன்பின் கொழுந்தென்று நினைத்துக் கண்ணிற்

குளிர்செய்து மேனி எங்கும் வழிந்தோடிக் கிலுகி லுப்பை

தன்னையும் அசைப்பாய் வாழி!

இருந்தஓர் மனமும், மிக்க

இனியதோர் குளிரும் கொண்டு விருந்தாய்நீ அடையும் தோறும் கோடையின் வெப்பத் திற்கு மருந்தாகி அயர்வினுக்கு

மாற்றாகிப், பின்னர், வானிற் பருந்தாகி, இளங்கி லைமேற்

பறந்தோடிப் பாடு கின்றாய்!”

என்ற பாடல்களால் சுட்டி மகிழ்கின்றார் பாவேந்தர். பொதிகை அன்னை தமிழைத் தந்தாள்; அது தனது அகத்திற்கு இன்பம் நல்குகின்றது. அவள் தென்றலைத் தந்தாள்; அது புறத்திற்கு இன்பம் விளைவிக்கின்றது என்று கூறி மகிழ்கின்றார்.

(9) மழை: மழையின்றேல் மாநிலத்தில் வாழ்வு இல்லை. இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை வான் சிறப்பில்” வடித்துக் காட்டுகின்றார். பாவேந்தரும் “அமிழ்து எது?” என்பதற்கு ஒரு பட்டிமன்றமே வைத்து அதில் தலைவனொருவன் தலைவி ஒருத்தி ஆகிய இருவரை வாதிடச் செய்கின்றார். அவர்கள் பேச்சில் மழையும்’ தலைகாட்டுகின்றது. தலைவன் “அமிழ்தே மழை” என்கின்றான்.

37. அழகின் சிரிப்பு - பக்கம் 8 38. பாதா.க. மூன்றாம் பகுதி. (95-10)