பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 Y பாவேந்தரின் பாட்டுத்திறன்

எங்கும் உளதுமழை

என்றும் உளதுமழை

தங்கும் உலகுயிரைச்

சாவாது காக்கும்மழை (பக்கம் 108) என்பான்: உலக உயிர்களைச் சாவாது காப்பது மழை என்று விளக்குவான். தலைவியும்.

மழையே அமிழ்து;

மழையே உலகை

அழியாது காப்பாற்றும் (பக்கம்105) என்று தலைவன் கருத்தை வழிமொழிகின்றாள். மழையைப் போற்றும் முகமாக,

மாமழை போற்றுதும்

மாமழை போற்றுதும்

நாமதீர் வேலி

உலகுக் கவனளிபோல்

மேல்தின்று தான்சுரத்த

லான்” என் றிளங்கோ

தானுரைத்த செய்யுள் (பக்கம்100) என்று தலைவன் சீர்சால் சிலப்பதிகார மேற்கோளை எடுத்து வைக்கின்றான். மேலும்

வானின்றுமிழும்

மழைதான் அமிழ்தென்று

நீநன்றறிந்தாயா

நேரிழையே இப்போது? (பக்கம்.101) என்று மழையின் பெருமையை உரைப்பான். பின்னர் மழை உண்டாவதையே அறிவியல் முறையில் விளக்குவான்.

நீர்தி நிலம்காற்று

விண்ணென்ற ஐம்பொருளில்

நீரின் நிலைகேள்: (பக்கம்106) என்று தொடங்கி,