பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை 193 முகிலென்றும் கொண்டலென்றும் விண்ணென்றும் கார் என்றும் மேலும் மழைஎன்றும் அண்ணாந்து நோக்கும் அமிழ்தமென்றும் மாரிஎன்றும் ஆயிரம் உண்டன்றோ? அவற்றில் அமிழ்தென்னும் தூய நிலைகருதித் தோன்றியதே அப்பெயர் (பக்கம் 107)

என்று ஒரு நிலையில் முடித்து முற்றும் கேள்” என்று மீண்டும்

தொடங்குகின்றான்.

4-- -- . 8, s. 8 - 98-e s. 9 - - - - வெப்பம் முகந்தநீரேமுகிலாம்; குற்றமறக் கொண்டநீர் கொண்டல், அக்கொண்டலோ மேற்போய் இருந்தநிலை விண்வான் விசும்பென்பார்; காற்றால் கருமைபெறக் காராகும்; கார்தான் மழைக்கும் நிலையில் மழையாம்; மழைதான் தழைய அமிழ்உண வாவதுதான் அமிழ்து (பக்கம் 108)

என்று மழை பெய்யும்வரை அதன் நிலையைக் குறிப்பிட்டு விளக்குகின்றான்.

ஒரு காலத்தில் “மாதம் மும்மாரி பெய்ததாகக் கூறினர் முன்னோர்; அவரே பிற்காலத்தில் வருடம் மூன்று மழை பெய்வதாக அரசியல் அமைப்பு திருத்தம்போல் மாற்றியுரைப்பார். இப்பொழுது நம் காலத்தில் எதுவும் சொல்லுவதற்கில்லை. வானிலைச் சோதிடமும், தவறி விடுகின்றது! மழை பொய்த்துப் போவதை,