பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் நோக்கில் இயற்கை Y 195 ஊருக்குக் கிழக்கே உள்ள

பெருங்கடல் ஒர மெல்லாம் கீரியின் உடல்வண் ணம்போல்

மணல்மெத்தை அம்மெத்தைமேல் நேரிடும் அலையோ, கல்வி

நிலையத்தில் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும் வீழும்;

புரண்டிடும் பாராய் தம்பி” பாடலைப் படிக்கும்போதே கடற்காட்சி நம் உள்ளத்தில் பதிந்து விடுகின்றது. அடுத்த பாடலில் “வெண்ணிற அன்னக் கூட்டங்கள் விளையாடி வீழ்வதைப்போலத் துள்ளித் துள்ளி அலைகள் கரையின் மணல்மீது சுழன்று வீசும்” என்பார். வெள்ளிய அலைகள் கரையைத் தொட்டுக் கடலுக்குள் மீண்ட பிறகு “சிறுகால் நண்டுப் பிள்ளைகள் ஒடி ஆடி விளையாடி மகிழ்ந்து காண்போர்க்குப் பெரியதொரு வியப்பினை ஊட்டும்” என்று காட்டுவார். கடலின் கண்கொள்ளாக் காட்சியைக் கவிஞர்,

பெரும்புனல் நிலையும் வானிற்

பிணைந்தஅக் கரையும், இப்பால் ஒருங்காக வடக்கும் தெற்கும்

ஓடுநீர் பரப்பும் காண இருவிழிச் சிறகால் நெஞ்சம்

எழுந்திடும்; முழுதும் கான ஒருகோடிச் சிறகு வேண்டும்

ஒகோகா எனப்பின் வாங்கும்” என்று காட்டுவார். காலையில் எழுஞாயிற்றின் பிறப்பை,

- - - - - - - - - s * - அடடா எங்கும் விழுந்தது தங்கத் துற்றல்!

வெளியெலாம் ஒளியின் வீச்சு முழங்கிய நீர்ப்பரப்பின்

முழுதும்பொன்னொளிபறக்கும்

41. அழகின் சிரிப்பு- பக்கம் 2 42. அழகின் சிரிப்பு- பக்கம் 3

14